வெள்ளி, 20 அக்டோபர், 2017

மெய்யான ஒளி.

முண்டகோபநிஷத் - பகுதி 4.

இறைமையின் வடிவம், அவரின் இருப்பிடம், அவரை அடையும் வழிமுறை இவற்றை அழகிய உதாரணங்கள் மூலம் இந்தப் பகுதியில் எளிமையாகக் கற்றுக்கொள்ளலாம்.

கடவுள் ஒளிகளுக்கெல்லாம் ஒளியாக இருக்கிறார்.

சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மின்னல், நெருப்பு இவை கடவுள் அல்ல. 

இந்தப் படைப்புகள் அனைத்தும் மெய்யான ஸ்வய்மாக விளங்குகின்ற கடவுளைச் சார்ந்தே சுடர்விட்டு இயங்குகின்றன. 

இந்தப் படைப்புகள் அனைத்தும் அவரது ஒளியின் மகிமையை வெளிப்படுத்துகின்றன.

கடவுள் படைப்பின் எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறார். இவர் நித்தியமானவர். அழிவற்றவர். வாக்கும், மனமும் உண்மையுமாக இருக்கிறார்.

மாசற்ற, தூய்மையான, வடிவமற்ற கடவுள் ஒளி பொருந்திய இருப்பிடமாகக் காணப்படும் மனதில் சஞ்சரிக்கிறார்.

இறைவனை அடைவதே வாழ்வின் மிக உன்னதமான இலக்கு.

வில் - அம்பு :


கடவுளை அடையும் முறை வில் அம்பு உதாரணம் மூலம்  எளிமையாக விளக்கப்பட்டுள்ளது.

உபநிஷத், வேதங்கள் இவை வில்லாக உருவகப்படுத்தப்பட்டு
டுள்ளது. 

மனித மனம் (ஆன்மா) அம்புக்கு ஒப்பானது.

நித்தியமான கடவுளை அடைவது என்பதே வாழ்வின் இலக்கு.

குறிக்கப்பட்ட இலக்கை  அடைவதற்கு அம்பானது கோணலற்றதாக, கூர்மையானதாகத் துல்லியமான முறையில் வில்லுடன் இனைக்கப்படுதல் அவசியமும் இன்றியமையாததுமாகும்.

அதுபோலவே மனமும் தூய்மையானதாக, வாய்மையுடன், ஒருமுகப்பட்டு கடவுளின்மீது ஆழ்ந்தப்பற்றுடன் வேதங்களில் தியானமாக இருத்தல் வேண்டும்.

இந்த நிலையை அடையச் சாதகன் தேவையற்ற, பயனற்ற பேச்சுக்களை விட்டுவிட வேண்டும்.

இதுவே சத்திய மார்க்கம் அடையும் வழி.

 தேர்ச் சக்கரம் - ஆரக் கால்கள் :


காணப்படும்  உயிர்கள் பல வடிவங்களில் ஆன்மாவிற்குத் தோற்றமளிக்கின்றன. இவை சக்கரத்தின் ஆரக் கால்கள் போன்றவை.  

பூமி, ஆகாசம், அனைத்து உயிர்களும் ஒன்றாக இறைவனில் கோர்க்கப்பட்டுள்ளன. இதுவே சக்கரத்தின் மையம். 

இவ்விதம் வேதத்தைத் தியானிப்பதன் மூலம் தோற்றமளிக்கும் பல வடிவங்களும் உண்மையற்றது என்கிற உண்மையை உணர்ந்து, இந்த அறியாமைக் கடலை கடக்க குருவானவர் ஆசிர்வதித்து உதவுகிறார்.

சிறியது : பெரியது :


மனம் ஒன்றை சாதாரணமாக கருதுகிறது. மற்றதைச் சிலாகித்து சிறப்பாக எண்ணுகிறது.  இவ்விதம் வேறுபடுத்திப் பார்ப்பதே ஆன்மா.

இவ்விதம் வேறுபடுத்தி உணரும் எண்ணங்கள் எங்கு உருவாகிறது என்று உற்று நோக்கினால் மனதின் இருப்பிடத்தை அறியலாம். 

இந்த ஒளிமிக்க இருப்பிடமான மையத்தில் வசிக்கும் ஆனந்த வடிவான, நித்தியமான, மரணமற்றதுமாக எப்பொழுதும் விளங்கிக் கொண்டிருக்கிற கடவுளை தீரர்கள் மட்டும் அறிகின்றனர்.

காரணம் - காரியம் : 


பல வடிவங்களும் கடவுளின் அம்சம். அனைத்து உயிர்களிலும் இறைவன் சஞ்சரிக்கிறார்.

கடவுள் ஒளியாக இருக்கிறார். அவர் வடிவமற்றவர். அவர் உயிர்களின் மனதில் சஞ்சரிக்கிறார்.

உயிர்களின் தோற்றம் என்பது உண்மையற்றது. 

இவ்விதம் அவரே காரணமாகவும் காரியமும் ஆக இருப்பதை உணரும்போது அறியாமை என்ற முடிச்சானது அவிழ்க்கப்படுகின்றது.

அனைத்துச் சந்தேகங்களும் நீக்கப்படுகின்றன. இதை உணர்ந்தவனுடைய  அனைத்துக் கர்மங்களும் நாசமாகின்றன.

நம் முன் தோற்றமளிக்கும் அனைத்தும் கடவுளின் அம்சம்.

பின்பாக தோன்றுவதும் அவரே. வலது பக்கம், இடது பக்கம், கீழும், மேலும், அவர் வியாபித்திருக்கிறார். 

இந்த உலகம் முற்றிலும் அவரது பிரசன்னத்தால் நிறைந்திருக்கிறது.


 ⚫ இரண்டாம் அத்தியாயம் / இரண்டாவது பிரிவு நிறைவுற்றது.


🔴 🔵 துணை நின்ற நூல் : ஸ்வாமி குருபரானந்தா அவர்கள் எழுதிய உபநிஷத்துக்கள்.2 கருத்துகள்:

 1. Very good writing and meaningful. Only one is very essential.... That is... GURU.... who will show and makes us feel of GOD....Thanks. Jai Jagannath....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை ரவி. சீடன் தன்னை அர்ப்பணித்து ஆயத்தமாகும்போது குரு பிரசன்னமாகிவிடுவார் என வாசித்ததாக நினைவு.
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   நீக்கு