வாழ்க்கையை மேம்படுத்தி வடிவமைக்க உதவும் 20 - பழக்கங்கள்.
01. ஒவ்வொரு நாளையும் நன்றியுடன் தொடங்குங்கள்.
சிறிய விஷயங்களையும் நன்றியுடன் நினைவு கூறுங்கள். அதைப் பாராட்டுவதற்குச் சிறிது நேரம் ஒதுக்குங்கள். நேர்மறையான மனப்பாங்கோடு இந்த நாளை எதிர் கொள்ளவும்.
02. அனுதினம்: சுய-மதிப்பிடு பயிற்சி.
உங்கள் சாதனைகள், சவால்கள், மற்றும் கற்றுக்கொண்ட அனுபவ பாடங்கள்; இவற்றை அனுதினம் ஆராய்ந்து மதிப்பிடுவதற்கு நேரத்தை ஒதுக்குங்கள்.
- விழிப்புணர்வு,
- நீங்கள் நடக்க வேண்டிய பாதை,
- உங்கள் வளர்ச்சிக்கு உத்வேகம் தரும் தரிசனம்
ஆகியவற்றை இது வளர்க்கிறது.
03. கவனமாகக் கேட்கும் கலையில் நிபுணத்துவம் பெறுங்கள்.
மற்றவர்களது உள்ளக் கிடக்கை உண்மையாகவே உணரும் வகையில் கேளுங்கள். அவர்கள் வெளிப்படுத்தும் கோணத்தைப் புரிந்து கொள்ளுங்கள். இது தொடர்பை வளர்க்கிறது. ஒத்துழைப்பை மேம்படுத்துகிறது.
ஆகத் தொடர்புகொள்பவரின் "உண்மையான நோக்கம்" என்ன என்பதைப் புரிந்து கொள்ளும் வகையில் கேளுங்கள்.
04. வளர்ச்சி மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
சவால்களை எதிர் கொள்ளுங்கள். தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். பின்னடைவுகளை எதிர்கொண்டாலும் விடாப்பிடியாகத் தொடருங்கள். நீங்கள் வலியை உணரவில்லை என்றால், வளரவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
5. சுய-பராமரிப்புக்கு முன்னுரிமை கொடுங்கள்.
உங்கள் மனம், உடல், ஆன்மா; இவற்றிற்குப் புத்துணர்வு அளிக்கும் செயல்களுக்கு நேரத்தை ஒதுக்குங்கள். ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு இது மிக அவசியம்.
06. இணைய உலா: ஆரோக்கியம் - மனவளம் - கவனம் தேவை.
தொடுதிரை நேரத்திற்கான எல்லைகளை வரையறுக்கவும். இணையத்திற்கு வெளியே நிகழும் செயல்பாடுகளுக்கு முன்னுரிமை அளியுங்கள்.
உண்மையான வாழ்க்கை - இணைய உலகம்: இவ் இரண்டிற்கும் இடையே ஆரோக்கியமான சமநிலையைப் பராமரிக்கவும்.
07. வளமான வாழ்க்கை முறையை நோக்கி சிறிய அடிகளை எடுங்கள்.
உடற்பயிற்சி மற்றும் சத்தான உணவுத் தேர்வு உங்கள் அனுதின இயல்பு வாழ்க்கை வழக்கமாக இருக்கட்டும். ஒரு நாளில் ஒரு முறையாவது!!!
08. மனவளப் பயிற்சி.
நிகழ்காலத் தருணத்தில் முழுமையாக இருங்கள். தீர்ப்பளிக்கும் மன நிலையிலிருந்து விடுபடுங்கள். அது தெளிவைக் கொண்டு வருகிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
உங்கள் மனதில் ஓடும் கதைகளை உணர்ந்து கொள்ள விழிப்புடன் இருங்கள்.
09. தொடர்பு வலைப்பின்னலைப் பேணுங்கள்.
உங்கள் துறையில் உள்ள நிபுணர்களுடன் அர்த்தமுள்ள தொடர்புகளை உருவாக்குங்கள். நேரம் ஒதுக்கி உதவி வழங்கத் தயாராக இருங்கள்.
நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்: தொடர்பு வலைப்பின்னலது வருமானம் பேராசை அல்ல, பெருந்தன்மை.
10. வழிகாட்டுதலை நாடுங்கள்.
உங்களுக்கு முன் அதே பாதையில் நடந்தவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்.
"வழிகாட்டி என்பவர், உங்களுக்குள் மறைந்திருக்கும் அதீத திறமை மற்றும் திறனை, நீங்கள் கண்டு உணர்வதை விட, மிகத் தெளிவாகக் காண்பவர். உங்களிடமிருந்து அதை வெளியே கொண்டு வர உதவுபவர்." - Bob Proctor.
11. அர்த்தமுள்ள உறவுகளை வளர்ப்பது அவசியம்.
உங்களது உயர்வை நாடும் நபர்களைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையை வளப்படுத்த உதவும் உண்மையான தொடர்புகளை உருவாக்க முயலுங்கள். அதைப் பராமரிப்பதற்குத் தேவைப்படும் முயற்சிக்கு நேரம் ஒதுக்குங்கள். இவை முதலீடு.
12. நிதி வளர்ச்சி கவனம் தேவை.
செல்வத்தை உருவாக்குதல், பல வழிகளில் வருமானத்தை உருவாக்கும் வழிமுறைகள் கண்டறிதல் மற்றும் நிலையான முதலீடு செய்தல் ஆகியவற்றை கற்றுக் கொள்ளுங்கள்.
13. விமர்சன கருத்துக்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் வளர்ச்சியை உயர்த்துவதற்கும், திறன்களை மேம்படுத்துவதற்கும் சக ஊழியர்கள், வழிகாட்டிகள் மற்றும் மேற்பார்வையாளர்களிடம் இருந்து வரும் விமரிசன கருத்துக்களைக் கூர்ந்து கவனிக்க ஆர்வமாக இருக்கவும்.
நினைவில் கொள்ளுங்கள்: விமரிசன கருத்து என்பது வெற்றி வீரர்களின் காலை உணவு.
14. தொடர்ந்து கற்றல்: நேசியுங்கள்.
உங்கள் அறிவை விரிவுபடுத்தவும், புதிய திறன்களைப் பெறவும் வாய்ப்புகளைத் தேடுங்கள். இது உங்களை எந்த சூழலுக்கும் பொருத்தமானவராகவும், உகந்தவராகவும் வைத்திருக்க உதவுகிறது.
குறிப்பு: கற்றலை நிறுத்தும் எவரும் தேக்கமடைந்து வளர்வதை நிறுத்துவர்.
15. நிபுணத்துவத்தை உள்ளடக்குங்கள்.
- ஒரு வலுவான பணி நெறிமுறையைக் கடைப்பிடிக்கவும்.
- திறம்படத் தொடர்பு கொள்ளவும்.
- சிறந்த முடிவுகளை வழங்கவும்.
16. உங்கள் பாதுகாப்பு மண்டலத்தை விட்டு வெளியே வாருங்கள்.
உங்கள் எல்லைகளைத் தாண்டி புதிய சவால்களை ஏற்றுக் கொள்ளும்போது தான் வளர்ச்சி ஏற்படும். உங்கள் பாதுகாப்பு மண்டலத்திலிருந்து வெளியே வராத வரை, உங்கள் வாழ்க்கையை, நீங்கள் ஒருபோதும் மேம்படுத்த முடியாது.
நினைவில் கொள்ளுங்கள்: உங்கள் பாதுகாப்பு மண்டலத்திற்கு வெளியே மாற்றம் தொடங்குகிறது.
17. அழகிய தருணங்களைத் தினசரி ஏட்டில் பதிவு செய்யுங்கள்.
பதிவுகள் மனதின் ரகசியங்களைத் திறந்து பார்க்க உதவுகிறது. சுய-மதிப்பிடு திறனை வளர்க்கிறது. தனிப்பட்ட வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. நன்றி உணர்வை வெளிப்படுத்த உதவுகிறது. திறந்த மனநிலைக்கு வழிவகுக்கிறது.
பதிவுகளைத் தொடர்ந்து எழுதிப் பயிற்சி செய்வது மிகச் சக்தி வாய்ந்தது.
18. சமூகத்திற்குத் திருப்பி தாருங்கள்.
தன்னார்வலர், வழிகாட்டி, உங்கள் இதயத்திற்கு நெருக்கமானவற்றை ஆதரித்தல்.., ஏதோ ஒரு வகையில் நீங்கள் பெற்றதை இந்த சமூகத்திற்குத் திருப்பிக் கொடுங்கள்.
அன்புடன் செய்யும் சிறிய கருணை செயல்கள், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
19. முன்னேற்றத்தைக் கொண்டாடுங்கள்.
வளர்ச்சியைக் கொண்டாடுங்கள். அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், முன்னோக்கிச் செல்லும் ஒவ்வொரு அடியும் உங்கள் அர்ப்பணிப்புக்கும் வளர்ச்சிக்கும் சான்றாகும். தொடர்ந்து பயணியுங்கள்.
20. தனித்துவத்தை உருவாக்குங்கள்.
உங்கள் நிபுணத்துவத்தை மட்டுமல்ல, உங்கள் மதிப்புகளையும் வெளிப்படுத்தும் விதமாகத் தனித்துவமான அடையாளத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் துறையில் உங்களைத் தனித்து நிற்கச் செய்கிறது.
Article taken with thanks from:
Mr. Subramanian Narayan
OD Consultant,
Culture Change and Business Results through Trust Building®,
Professional Speaker, Executive Coach and Voiceover artist.
படங்கள்: இணையத்திலிருந்து நன்றியுடன்..