வெற்றி வாழ்க்கைக்கு உதவும் மிகவும் பயனுள்ள சில பண்புகள்.
நமது வாழ்வில் முன்னேற உதவிய குரு, பெற்றோர், ஆசிரியர், நண்பர், உறவினர் வரிசையில் புத்தகங்களுக்கும் கட்டாயம் ஓர் இடம் உண்டு.
அடுத்து எழுதப்பட்டிருக்கும் சில வரிகள் எனது வாழ்க்கையைச் செப்பனிட உதவிய அற்புதமானதொரு நூலுக்கு ஒரு நன்றியறிதலே.
1989 ம் ஆண்டு Dr. Stephen R. Covey அவர்களால் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட சுய உதவி முன்னேற்றப் புத்தகம் "The 7 habits of highly effective people ".
இப் புத்தகம் 1 Million Audio versions மற்றும் 25 million புத்தகங்கள் விற்பனையாகி US publishing வரலாற்றில் ஒரு மகத்தான சாதனை புரிந்தது.
பயனுள்ள வாழ்க்கை வாழ்வதற்கு உதவும் ஏழு இன்றியமையாத உயர்ந்த பண்புகளைக் குறித்து மிக மிக விவரமாக இந்த நூல் விளக்குகின்றது.
நம்முடைய குணங்கள், புரிதல்கள் எவ்வளவு தூரம் வாழ்க்கையின் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன என நாம் நன்கு அறிவோம்.
இப் புத்தகம் நம் குணங்களை, முயற்சி மற்றும் பயிற்சியின் மூலம் எவ்வாறு மாற்றிப் புதுப்பிக்க முடியும் என்பதை விஸ்தாரமாக, தெளிவாக, எளிமையான உதாரணங்களுடன் விளக்குகிறது.
நல்ல தரமான விதைகள் சிறந்த மகசூலை அளிக்கும் . ஆரோக்கியமான கோழி அதிக முட்டைகளைத் தரும். சிறந்த பலன்களைப் பெற நல்ல பராமரிப்பு மிகவும் அடிப்படையான தேவை.
அதுபோல மேன்மையான வாழ்விற்கு அடிப்படை மாசற்ற மனமும் உயர்ந்தப் பண்புகள் நிறைந்த சிந்தனையும்.
இப் பிரபஞ்சம் சில நெறிமுறைகளுக்குட்பட்டு ஒரு வரையறைக்குள் இயங்குகின்றது. இது பிரபஞ்சத்தின் லயம்.
மனித மனங்கள் அறநெறி சார்ந்து இயங்கும் போது மட்டுமே பிரபஞ்ச லயத்துடன் இனைந்து மகத்தான சாதனைகளை நிகழ்த்தும்.
அறநெறி சார்ந்த வாழ்வு உள்ளான மனித மனங்களின் மதிப்பீடுகளை உயர்த்துகிறது. நம்பிக்கை மற்றும் மன உறுதியை மேம்படுகிறது.
நமது மதிப்பீடுகள் நம்மை ஆளுகை செய்கின்றன. மதிப்பீடு என்பது அகநிலை.
மதிப்பிடுதல் சீரமைக்கப்படும் போது ஆளுமைத்திறன் மேம்படுகிறது.
Covey வலியுறுத்தும் ஏழு பண்புகள் நிர்வாகத்திறனை மேம்படுத்து உதவும் சில பயிற்சி முறைகள் அல்ல.
இவை அறவழி நெறிமுறைகள் வழியாகத் தொடர்ச்சியான கட்டுப்படுத்தப்பட்ட பழக்க வழக்கங்களின் மூலம் சார்பு நிலையிலிருந்து (From the Dependence), கூட்டுறவான வாழ்வை நோக்கி ( Towards the State of Interdependence) சுதந்திரமான பாதையின் வழியாக (Via the path of Independence) வழிநடத்துகிறது.
7 - பண்புகள்.
1. Be Proactive.
2. Begin with the End in mind.
3. Put first things first.
4. Think Win - Win.
5. Seek first to Understand, Then to be Understood.
6. Synergies (Principles of creating co -operation).
7. Sharpens the Saw (Principles of balanced Self-renewal).
முதல் மூன்று பண்புகள் தனிமனித குணங்களை மாற்றவும், புதுப்பிக்கவும் உதவும் வழிமுறைகளை விளக்குகின்றது.
மனித மனதின் தவறான புரிதல்களை உணரவும், அவற்றை எவ்விதம் களைவது என்பதை அழகாக எடுத்துக்காட்டுகள் மூலம் போதிக்கப்பட்டுள்ளது. நம்மைச் சுற்றி நிகழ்பவற்றை உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ள இப் பாடங்கள் உதவும்.
நமது சக்தி மற்றும் ஆற்றல் சரியான பாதையில் பயணித்திட வழி காட்டும்.
கரிசனை உடையக் கவலை தரும் விஷயங்கள் (Concerned matters) கடந்து, நம்மால் செயலாற்றக்கூடிய, தாக்கம் ஏற்படுத்தும் காரியங்களில் (Influenced matters) மட்டும் நமது சக்தி செலவிடப்படக் கற்றுக் கொள்ளலாம்.
வாழ்வில்
எது முக்கியம் (Important)
எது அவசரம் (Urgent)
எவை முக்கியமற்றவை (Not Important)
எவை அவசரமற்றவை (Not Urgent)
என வகைப்படுத்திக் காரியங்களை வரிசைப்படுத்திச் செயலாற்ற இப் புத்தகம் அருமையாக வழி காட்டுகிறது.
நாம் கருதும் பல முக்கியமானவை உண்மையில் வாழ்க்கைக்கு அவ்வளவு அத்தியாவசியமானது அல்ல என்கிற தெளிவும் கிடைக்கலாம்.!
நான்கு மற்றும் ஐந்தாவது பண்புகள் சமூகத்துடன் நாம் இனைந்து வாழக் கற்றுத்தருகிறது.
வெற்றி என்பது இனைந்து அனுபவித்தல்!
ஆம் பிறரது தோல்வியில் அல்ல, நம்முடன் இனைந்து வாழ்பவர்களின் முன்னேற்றமும் இனைந்தது தான் வெற்றி.
நாம் பிறரால் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதை விட, பிறரது உணர்வுகளைப் புரிந்து செயல்படுவதன் முக்கியத்துவம் பற்றி மிக அழகாக விளக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான பயிற்சி மூலம் மிகச்சிறந்த இசை வித்துவானாக, விளையாட்டு நிபுணராக, கலைஞராக மாறமுடியுமோ அதுபோல இப்பண்புகளை வாழ்வில் சிரத்தையுடன் கடைப்பிடித்தால் மேன்மையான வாழ்வு நிச்சயம்.
ஆஹா அருமை
பதிலளிநீக்குநன்றி ரவி.
நீக்குமிக நல்ல புத்தகம்.வாழ்வியல் சிந்தனைகள் புத்தகத்தில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய புத்தகத்தை தேடி கண்டுபிடித்துப்படித்த புத்தகம்.மதுரை தொழிலதிபர் ஞானசம்பந்தன் மணிக்கணக்கில் இப்புத்தகம் பற்றி பேசுவார்.நல்ல பதிவிற்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமுனைவர் அவர்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
நீக்கு// நம்முடன் இனைந்து வாழ்பவர்களின் முன்னேற்றமும் இனைந்தது தான் வெற்றி... //
பதிலளிநீக்குஇதை விட என்ன வேண்டும்...? அருமை...
நன்றி திரு.தனபாலன்.
நீக்குநல்ல புத்தக அறிமுகத்திற்கு நன்றி
பதிலளிநீக்குநன்றி திரு.சிவகுமார்.
நீக்கு