எது சரி? எது தவறு?
ஒரு கருத்தை முன்வைப்பதற்கு முன்பாக,
எதற்காக அதைக் குறித்து சிந்திக்கிறோம்?
ஏன் பேச விரும்புகிறோம்?
எதை தீர்மானிக்க உதவும்படி எழுதுகிறோம் என்கிற
அடிப்படை புரிதல் தேவை.
இன்றைய விவாதப்பொருள் :
நல்ல கருத்துகளை தங்கள் சொந்த வாழ்வில் கடைப்பிடிக்காமல், ஆனால் அந்தக் கருத்துகளைச் செயல்படுத்த தன்னை முன்னிலைப்படுத்துவதுசரியா? தவறா?
அவற்றை அப்பியாசிக்க வேண்டியது கட்டாயம் தேவையா? இல்லையா?
கற்பைக் குறித்து அதைக் குறித்த அக்கறையே இல்லாதவர் வியாக்கியானம்
செய்வது,
குடும்பம் மற்றும் குழந்தை வளர்ப்பைப் பற்றி குடும்ப வாழ்வையே முறையாக
வாழாதவர் எழுதுவதும், கற்றுக்கொடுப்பதும்,
நேர்மையற்ற முறைகேடு செய்பவர், நீதியான ஆட்சி குறித்து விஸ்தாரமாக
பேசுவதும்,
தனிப்பட்ட வாழ்வில் ஒழுக்கமற்ற முறைகேடான வாழ்பவர் அறநெறி பற்றி போதிப்பதும்
சரியா? தவறா? முறையா?
TWO DIFFERENF THOUGHTS OF SCHOOLS :
எந்த ஒரு கருத்தைக் குறித்து சிந்தித்தாலும் அதற்கு இரண்டு விதமானநிலைப்பாடு உண்டு.
முதல் நிலை :
The messenger is not much important rather the contents of the message prevails needs to be focussed.யார் சொல்லுகிறார்கள் என்பதல்ல முக்கியம் ; செய்தியின் உள்ளடக்கம் சிறப்பாக இருக்கிறதா என்பதே கவணிக்கப்பட வேண்டும்.
இரண்டாவது நிலை :
கருத்துக்கள் விவாதிக்கப்படுவதோடு முடிவதில்லை அவை நடைமுறைபடுத்தப்பட வேண்டும். தனது சொந்த வாழ்க்கையிலேயே அப்பியாசிக்க முடியாத ஒன்றை ஒரு மனிதன் பொது வாழ்வில் செயல்படுத்துவார் என்பதை
எங்கனம் எதிர்பார்க்க முடியும்.
இவற்றுள் எது சரி? எது தவறு?
ஓர் ஆசிரிய நண்பர் இப்படிக் கூறினார்.
சரி அல்லது தவறு எது என்பது அவரவர் பார்வையின் கோணங்களில் (Perspectives) அடிப்படையில் அமைகிறது.
இதன் நீட்சியாக நம் மனதின் அனுமானங்களின் (Perceptions) புரிதல்கள் அடிப்படையில் சரி மற்றும் தவறுகளைத் தீர்மானிக்கின்றோம்.
- வாழ்க்கைச் சூழல்
- பொருளாதார நிலை
- நட்பு வட்டம்
- கல்வி
- பண்பாடு
- கலாச்சாரம்
- சமய நம்பிக்கை
- வாழ்க்கை அனுபவம்
இவை போன்ற பல காரணிகளை நமக்குள் ஏற்படுத்தும் புரிதல்கள் அடிப்படையில் மன அபிப்பிராயம் உருவாகின்றது.
- அறவழி நூல்கள்.
இதனடிப்படையில் சரியானது, தவறானது எனத் தரம் பிரிக்கின்றோம்.
நமது புரிதல்கள், புலனுணர்வு (Perception) பார்வையில் சரியெனப்படுவது, பிறர் பார்வையில் அபத்தமாகத் தோன்றக்கூடும். அஃது உண்மையாகக் கூட இருக்கலாம்.
கற்றுத் தெளிதல்.
படித்த கதை ஒன்று நினைவில் வருகிறது. ஒரு தாய் தன் மகன் அதிக இனிப்புகளை உண்பதாகத் துறவியிடம் கூறிக் கவலைப்பட்டார். அஃது அவனது உடல் நலத்துக்கு உகந்ததல்ல என வருத்தப்பட்டார். நீங்கள் தான் அவனுக்கு நல்ல புத்திமதி கூற வேண்டும் என வேண்டிக் கொண்டார்.
துறவி ஒரு வாரம் கழித்து மகனை அழைத்து வரும்படி பணித்தார். ஒரு வாரம் கடந்து பின்பு அந்தச் சிறுவனுக்கு அதிகமாக இனிப்புகள் உண்பதால் வரும் தீமைகளை எடுத்துரைத்தார். அவற்றை விட்டுவிடும்படி அறிவுறுத்தினார்.
தாய்க்கு மிக்க மகிழ்ச்சி. அவருக்கு நன்றி செலுத்தினார். பின்பு பணிவுடன் ஐயா நீங்கள் ஏன் இந்த அறிவுரை சென்ற வாரம் வழங்கவில்லை?
துறவி பதிலுரைத்தார்!
அம்மா ஒரு வாரக் காலம் முதலில் இனிப்பு உண்ணாமல் வாழ நான் பயின்றேன். அதன்பின் அவனுக்கு உபதேசிப்பது எனக்கு எளிமையானதாக இருந்தது.
நல்லக் கருத்துகளை யார் வேண்டுமானாலும் எடுத்துரைக்கலாம்.
ஆனால் அதைச் செயல்படுத்தும் தகுதி அவற்றை கடைப்பிடிப்பவர்க்கு மட்டுமே உண்டு.
இல்லையென்றால் சாரய ஆலை உரிமையாளர் நீதியான ஆட்சி அளித்தது போலத் தான் அமையும்.
உண்மை... நன்றி
பதிலளிநீக்குநன்றி ரவி.
பதிலளிநீக்குபுதையல்-புதயல்?
பதிலளிநீக்கு