🌺 நற்குணங்கள் தரும் நல்வாழ்வு.
🔹 கசப்பை வளரவிடாதீர்கள். பழிவாங்குதலில் முடியும்வரை அதன் அனல் அணையாது!
அதற்கு மாற்றாக அன்பினால் மனதை நிரப்புங்கள். அதன் நேசத்தில் எப்போதும் மகிழ்ந்து களி கூறலாம்.
🔸 இச்சையை வளரவிடாதீர்கள். விபச்சாரத்தில் முடியும்வரை அதன் இமை சாயாது!.
ஒழுக்கத்தை உயிரை விட மேலாக கருதி நேசியுங்கள். அதுவே வாழ்வை மேன்மைப்படுத்தும்.
🔹 கோபத்தை வளர விடாதேயுங்கள். கொலையில் முடியும்வரை அதன் குருதி ஆறாது!
மன்னிப்பை ஈந்தளியுங்கள். மனதின் சமாதானம் கடலைப்போல விஸ்தாரம் ஆகும்.
🔸 பெருமையை வளர விடாதேயுங்கள். அவமானத்தில் முடியும்வரை அதன் தாகம் தீராது!
தாழ்மையை மனதில் எப்போதும் தரித்துக் கொள்ளுங்கள். அது உயர்ந்ததும் உன்னதமான நிலையை எய்திட அனுக்கிரகம் செய்திடும்.
🔹 பொறாமையை வளர விடாதேயுங்கள். நம்மை கொல்லாதவரை அதன் வேகம் குறையாது!
பிறரின் திறமையை, உழைப்பை, உயர்வை அங்கீகரியுங்கள். அது அனைவருடனும் நட்போடும், நேசத்துடனும் வாழ்வில் சுபிட்சமாக வாழந்திட அருள் செய்யும்.
வாழ்க வளமுடன்.
வளர விடக் கூடாத குணங்களையும் அவற்றால் வரக் கூடிய விளைவுகளையும் சிறப்பாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி மேடம்.
பதிலளிநீக்கு