ஞாயிறு, 9 ஜனவரி, 2022

யார் இறை பக்தன்?

 வைஷ்ணவ  ஜனதோ  


அண்ணல் காந்தி அடிகளுக்கு மிகவும் பிடித்தமான பாடல் "வைஷ்ணவ ஜனதோ". இந்தப் பாடலை எழுதியவர் "நர்சிங் மேத்தா" எனும் இறை பக்தர். இவர் அண்ணல் காந்தி பிறப்பதற்கு 400 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர். (1414 - 1480).

வைஷ்ணவ குலத்தில் பிறந்தவர். அதிகம் படிக்காதவர். ஆனால் அவர் இயற்றிய பாடல்கள் ஆழமான பொருள் பொதிந்தவை. உயர்ந்த குலத்தில் பிறந்த போதிலும் பிறப்பால் அனைவரும் சமம். மனிதர்களுள் பேதம் பார்ப்பது பாவம். இச்செயலை இறைவன் ஏற்க மாட்டார் என்று போதித்தார்.

உண்மையான இறை பக்தன் என்பவர் எத்தகைய குணம் உடையவராக இருப்பார் என்பதே "வைஷ்ணவ ஜனதோ" பாடலில் புதைந்துள்ள கருத்துச் சுருக்கம்.

வைஷ்ணவ ஜனதோ  - யார் இறை பக்தன்? - பாடலின் பொருள்

அன்பு அடக்கம் கொண்டவன் (ள்) 

அடுத்தவர் துயர் துடைப்பவன் (ள்) 

அகந்தை அற்றவன் (ள்) 

எண்ணம், சொல், செயலில் தூய்மையானவன் (ள்) 

எவரையும் என்றும் நிந்திக்காதவன் (ள்) 

பிற மகளிரைத் தாயாக வணங்குபவன்

பிறர் செல்வத்தைத் தீண்டாதவன் (ள்) 

ஆசையைத் துறந்தவன் (ள்) 

உள்ளத்தில் உறுதி கொண்டவன் (ள்) 

காமம், கபடம், கோபம் துறந்தவன் (ள்) 

எல்லோரையும் ஒன்றாக நேசிப்பவன் (ள்) 

எந்நேரமும் இறைவன் நாமம் துதிப்பவன் (ள்) 

அவனே(ளே) உண்மை இறை பக்தன் (ள்). 

அந்த இறைவனைத் துதிப்போம். வணங்குவோம். மகிழ்வோம். 


முனைவர் அ. பிச்சை அவர்கள் தினமணியில் 01.01.2022 எழுதிய சிறப்புக் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்ட சுருக்கம் நன்றியுடன். 


2 கருத்துகள்: