இரு பறவைகள்.
தன்னைத்தான் மோகித்துச் சேவிக்க விழைகிறது ஆணவம்.
பிறருக்குப் பணிவிடை செய்யத் துடிக்கிறது ஆன்மா.
அங்கீகாரம் நாடி, அதைப் புறத்தில் தேடி ஆணவம் ஓடுகிறது.
உள்ளான நம்பிக்கை ஆன்மாவிற்கு உசிதம்.
ஆணவம் வாழ்க்கையைப் போட்டிகள் நிறைந்த களமாகக் காண்கிறது.
ஆன்மாவிற்கு வாழ்க்கை கையளிக்கப்பட்ட ஓர் வெகுமதி.
நான் எனும் இறுமாப்பு ஆணவத்தின் அஸ்திவாரம்.
அன்பில் நிலை நிற்கிறது ஆன்மா .
வெளியே நடப்பதை வேடிக்கை பார்ப்பது ஆணவத்தின் வாடிக்கை.
உள்ளத்தை உற்றுப் பார்த்து உண்மையில் உவகை அடைவது ஆன்மா.
ஆணவம் பற்றாக்குறையைப் பறைசாற்றுகின்றன.
ஆன்மா பொங்கி வழியும் மிகுதியைச் சுட்டிக் காட்டுகிறது.
ஆணவம் காமத்தில் கட்டுண்டு இழுத்த இழுப்பில் அலைந்து திரிகிறது.
ஆன்மா அன்பில் பிணைக்கப்பட்டு அடங்கிய இறைப் பறவை.
வாழ்க்கையில் பெறப்படும் கொடைகள் கண்டு ஆணவம் குதுகலிக்கிறது.
அதன் பயணத்தை இரசிப்பதில் திருப்தியுடன் ஆன்மா உவகை அடைகிறது.
வாழ்வில் அடையும் வலிகளின் ஊற்றுக்கண் ஆணவம்.
ஆன்மா ஔஷதமான மருந்து.
ஆணவம் அறிவைத் தேடுகிறது.
ஆன்மா ஞானத்தின் உறைவிடம்.
ஆணவம் இறைமையை மறுதலிக்கிறது.
ஆன்மா இறைவனை ஆரத் தழுவிப் பணிகிறது.
ஆணவம் மரணத்தில் மறைகிறது.
ஆன்மா அழிவதில்லை.
ஆணவம் என்பது நான்.
ஆன்மா என்பது நாம்.
******* ******* ******* *******
Author: Unknown.
படம் இணையத்திலிருந்து நன்றியுடன்.
அருமை...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குமிக அருமையாகச் சொல்லப்பட்டுள்ளது. சிறப்பான தமிழாக்கம். இறுதி வரிகள் நன்று. தாங்கள் தந்திருக்கும் தலைப்பும் நன்று.
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சியுடன் நன்றி.
நீக்கு