ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

🌺 வேதம் ஓர் அறிமுகம்.

🌺 வேதம் ஓர் அறிமுகம். 


வேதங்கள் என்றால் என்ன?


வேதம் என்பது ஓர் அறிவுக்களஞ்சியம்.  (A body of knowledge).

🌺 வேதம் வாழ்வின் நோக்கத்தை புரியவைக்கிறது.
அதை அடைவதே நம் இலட்சியம் என்பதை உணர்த்துகின்றது.
அந்த இலக்கை அடைவதற்கான பாதைகள் பற்றிய
அறிவைக் கொடுத்து வழி நடத்துகின்றது.
வாழ்வை வேதமானது பயனுடையதாக்குகிறது.

வேதம் வாழ்வின் அனைத்து இலட்சியங்களையும் நான்காகப் பிரிக்கின்றன.
1. அர்த்தம்
2. காமம் (விருப்பம்)
3. தர்மம்
4. மோகூஷம் (இறைநிலை) .

1. அர்த்தம்.
உடலும் மனமும் வருந்தாது இருக்க, நம்முடைய பாதுகாப்பிற்காகப்
நாம் சேர்க்கும் உடமைகள் அர்த்தம் எனப்படும.

2. காமம்.
உடலும் மனமும் இன்புற்றிருக்க நாம் சேர்க்கும் பொருள்கள் காமம்.
பசியை நீக்க நாடும் உணவுப் பொருள் அர்த்தம்.
சுவைக்காக நாடும் உணவுப் பொருள் காமம்.

3. தர்மம்.
தர்மம் என்பது புண்ணியம். கண்ணிற்குத் தெரியாத இந்தப்
புண்ணியமானது வேதத்தில் கூறிய செயல்களை செய்வதால்
அடையப்படுகிறது.

🔸 இம்மூன்று நிலையையும் அடைய வேதம் பலவித வழிமுறைகளை
கூறிய போதும் இவற்றுள் உள்ள குறைபாடுகளையும்
எடுத்துக்காட்டுகிறது.

1. ஒவ்வொரு இன்பத்திலும் துன்பம் கலந்தே உள்ளது.
இன்பத்தை தரும் பொருட்களை அடைதல், அவற்றை பாதுகாத்தல்,
அவற்றை இழந்து விடுவோமோ எனும் அச்சம் இவைகள்
இன்பங்களை துயரத்துடன் கலந்ததாகவே ஆக்குகிறது.

2. எந்த இன்பமும் முழு நிறைவைக் கொடுப்பதில்லை.

3. அனைத்து இன்பங்களும் பொருள்களைச் சார்ந்திருக்கச் செய்து
நம்மை அடிமையாக்குகின்றன.

இவ்விதம் நமக்கு குறைகளைக் காட்டி, இக்குறைகளற்ற
மோகூஷம் (இறைநிலை) என்ற இலட்சியத்தை நமக்கு
வேதம் அறிமுகப்படுத்துகிறது. அதை அடைவதற்கான
பாதையையும் காட்டித்தருகிறது.

🌺 இறைநிலை என்பது முழு மனநிறைவை அடைதல்.

🌺 தன்னை முழுமையாக உணர்தல்.

🌺 அர்த்த, காம, தர்மங்களுக்கு நாம் அடிமைப்படாமல்
அந்த தேவை என்ற நிபந்தனைகளிலிருந்து  விடுபடுதல்.

🌺 மரண பயம் நீங்குதல்.

🌺 படைப்பின் ஒர்மை, பன்மை அறிவை அடைதல்.

6 கருத்துகள்:

  1. வாழ்க்கை பற்றிய சுருக்கமாக சிறந்த விளக்கம். நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  2. அருமையான துவக்கம் நண்பா, வேதத்தை உங்கள் புரிதலில் மிக சுருக்கமாக அழகாக எளிமையாக ... வெளிப்படுத்தி உள்ளீர்கள்! ஆஹா...

    பதிலளிநீக்கு