செவ்வாய், 25 ஏப்ரல், 2017

ITHAKA - பாடல் மொழிபெயர்ப்பு

ITHAKA - பாடல் மொழிபெயர்ப்பு 


1894 ஆம் ஆண்டு எழுதப்பட்டு 1910 இல் வெளியிடப்பட்ட Constantine Cavafy 
இயற்றிய "ITHACA" என்ற கவிதை உலகப்பிரசித்தம் பெற்றது.

இந்த பாடல் வாழ்க்கையை ஒரு பயணமாக உருவகப்படுத்தி எழுதப்பட்டது.

உலகப்புகழ் பெற்ற இலக்கியங்கள், பாடல்கள், இசை, ஓவியங்கள் என படைப்புகள் எந்த அடிப்படையில் அச் சிறப்பை பெறுகின்றன?
பல காரணிகள் இருப்பினும் முதன்மையாது அப்படைப்புகளில் இழையோடும் உண்மை.   
அது நமது வாழ்வினில் மறைந்திருக்கும் "வாழ்வியல் உண்மைகளை " மிக அழகாக வெளிப்படுத்தும்.
அந்த உண்மைகளை வாசிப்பவர் உணரும் தருணத்தில் கிளர்த்தெழுப்பும் மனஉணர்வு எழுச்சிகளே மிகச்சிறந்த வாசிப்பு அனுபவத்தை தருகிறது.

இக்கவிதையின் உள்ளடக்கம் :


ஆனந்தம் என்பது வாழ்வில் இலக்குகளை தீர்மானிப்பது, அதை அடைய சிந்தித்து செயல்படுவது மட்டும் அல்ல. எதிர்ப்புகளை கடந்து அந்த இலக்கை அடைவதில் மாத்திரமும் அல்ல.  
மாறாக மகிழ்ச்சி என்பது அந்த இலக்கை நோக்கி நாம் பயணிக்கும் போது அடைகின்ற அனுபவங்களையும் உள்ளடக்கியது.!!!

  1. 🌺 அழகிய தீவை நோக்கி


அழகிய தீவை நோக்கிய உனது பயணத்தை
பிரார்த்தனையுடன் துவங்கு!
நீண்ட நெடிய இப்பாதை முழுவதும்
ஆச்சரியமான புதிர்கள் நிறைந்த ஞானவழி.

பயணத்தின் ஊடாக அச்சுறுத்தும் அலகைகள்
எதிர்படுமோ என அஞ்சாதே!
தூய்மையான எண்ணங்களும், உன்னத உணர்வுகளும்
உனது உடலோடும்,  மனதோடும் உறவாடும் வரையில் ;
உனது ஆன்மாவில் நீ அவைகளை சுமக்காதவரையில்,
மனதினால் நீ அவைகளுக்கு உயிர் ஊட்டாதவரையில்,
அவைகள் உனக்கு எதிர்படுவதேயில்லை.

கடந்து செல்ல வேண்டிய பாதை நீண்டு நெடியது.
பிரார்த்தனையுடன் தொடர்ந்து முன்னேறு.
பல அழகிய விடியல்கள் கடக்கின்றன
முதன்முறையாக இதோ ஓர் அழகிய நகரத்தில்!
எத்தனை உவப்பு!! எத்தனை களிப்பு!!
வியாபார வீதிகளில் நின்று கவனி!
அழகிய முத்துக்கள், அற்புதமான பவளம்,
நறுமணத் தைலம், உயர்ந்த வாசனைத்திரவியங்கள்,
எவ்வளவு இயலுமோ அவ்வளவு அடைந்து விடு.
எகிப்தின் நகரங்களில் விருந்தினர்களோடு உலாவு!!
கற்றுக்கொள்! கற்றுக்கொள்!
ஞானங்களை கற்று உணர்ந்தரோடு!!

"அழகிய வாழ்வு" எனும் பயணத்தை
எப்போதும் மனதில் நிலைநிறுத்து.
இலக்கை அடைவதே இறுதி இலட்சியம்.
எனினும் பயணத்தை துரிதப்படுத்த முயலாதே!
நீண்ட நெடிய வருடங்களில் அதை கடப்பதே  அழகு!

உன் முதிர் வயதில் அழகிய தீவு இடைப்பட்டால்
நீ ஈட்டடிய செல்வங்களுடன்
நங்கூரமிட்டு இளைப்பாறு.
 "அழகிய பயணம் " எனும் இலக்கை அடைந்ததும்
நீ எதிர்பார்த்தவைகள் இல்லாது இருக்கலாம்.
நீ சற்று ஏமாற்றமும், வெறுமையும் உணரலாம்.

 🌺அவள் உனக்கு மிக அழகிய பயணம் தந்தாள்.
அவளின்றி நீ இப்பாதையில் பயணித்திருக்க இயலாது.
இதனின்று கொடுக்க வெறொன்றுமில்லை அவளிடம்!
அவள் ஏழை என நீ கருதினால்,
மனதில் வை
அவள் உன்னை ஏமாற்றவில்லை.
நீ கற்ற, பெற்ற, ஞானம், அனுபவம்
உனக்கு உணர்த்தும்
ஆனந்தத்தின் உண்மை தன்மையை!!!

Ithaka English Version

As you set out for Ithaka
hope the voyage is a long one,
full of adventure, full of discovery.
Laistrygonians and Cyclops,
angry Poseidon—don’t be afraid of them:
you’ll never find things like that on your way
as long as you keep your thoughts raised high,
as long as a rare excitement
stirs your spirit and your body.
Laistrygonians and Cyclops,
wild Poseidon—you won’t encounter them
unless you bring them along inside your soul,
unless your soul sets them up in front of you.

Hope the voyage is a long one.
May there be many a summer morning when,
with what pleasure, what joy,
you come into harbors seen for the first time;
may you stop at Phoenician trading stations
to buy fine things,
mother of pearl and coral, amber and ebony,
sensual perfume of every kind—
as many sensual perfumes as you can;
and may you visit many Egyptian cities
to gather stores of knowledge from their scholars.

Keep Ithaka always in your mind.
Arriving there is what you are destined for.
But do not hurry the journey at all.
Better if it lasts for years,
so you are old by the time you reach the island,
wealthy with all you have gained on the way,
not expecting Ithaka to make you rich.

Ithaka gave you the marvelous journey.
Without her you would not have set out.
She has nothing left to give you now.

And if you find her poor, Ithaka won’t have fooled you.
Wise as you will have become, so full of experience,
you will have understood by then what these Ithakas mean. 
Translated by Edmund Keeley/Philip Sherrard

(C.P. Cavafy, Collected Poems. Translated by Edmund Keeley and Philip Sherrard. Edited by George Savidis. Revised Edition. Princeton University Press, 1992) 

8 கருத்துகள்:

  1. அருமை சார் .....

    ஒவ்வொரு வரிகளும் முத்துக்கள்....
    உணர்த்தும்ஆனந்தத்தின் உண்மை தன்மை மிக அழகு .....
    மனதை பாதிக்கின்றன உணர்வால் ......
    உண்மையின் உரைகளும் இதுவே .......
    அழகிய தீவு முக்தியின் பயணம் .....

    நன்றி ... தங்கள் படைப்பிற்கு.....

    சங்கர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகிய தீவு முக்தியின் பயணம் - சிறப்பான கருத்துரு.
      நன்றி சங்கர்!

      நீக்கு
  2. வாழ்வியல் உண்மையை சொல்லிய விதம் அழகு இரசித்தேன் நண்பரே – கில்லர்ஜி

    நண்பரே எழுத்தின் அளவை சற்று பெரிதாக்கலாமே....

    பதிலளிநீக்கு
  3. நண்பரே, ஆங்கில கவிதை படிக்காத எம்போன்றோர்க்கு இத்தமிழாக்கம் ஒரு உதவிக்கரம். மிக நல்ல தமிழில் மொழி பெயர்ப்பு... எவ்வளவு அர்த்தம் மிக்க கவிதை...தெளிந்த நடை... மிக தெளிவான வாழ்க்கை பயணத்திற்கு நல்ல அறிவுரை..நன்றிகள் பலப்பல..ITHICA ....பாண்டியன் மூலம் படிக்க பெற்றோம்!

    பதிலளிநீக்கு