சனி, 18 ஆகஸ்ட், 2018

அகந்தை செய்யும் மாயம்.

🌺 அகந்தை செய்யும் மாயம். 



(Excerpts from the book of  "Cutting through Spiritual Materialism".)
by Chogyam Trungpa.

The problem is that ego can convert anything to its own use, even spirituality.


▪ நாம் எதிர்கொள்ளும் மனதின் எரிச்சல்களைத் தவிர்க்கவும், தன்னை பாதுகாப்பாகத்  வைத்துக் கொள்வதும் அகந்தையின் இயல்பான தன்மையாக இருக்கிறது.

▪ அகந்தையின் ஆளுகையால் மனம் புதிதாக எதையும் உள்வாங்கிக் கொள்ளமுடியாமல் தடுக்கப்படுகிறது.

▪ அகந்தை தன் அடையாளத்தை இழக்க நேரிடும் எந்த முயற்சியிலும் இறங்குவதில்லை.

▪ ‘சமயம்’ என்பதன் மூலம் தன் அடையாளத்தைக் காத்துக்கொள்ளலாம் என்று அகந்தை நினைப்பதால், அஃது அந்த வழியில்  பயணிக்கிறது.

▪ ஆன்மிகத் தேடல் என்பதை வீரதீரமான செயல்களை செய்வதன் வழியாகவே நிறைவேற்ற அகந்தை விரும்புகிறது.

▪ நமது தனித்துவத்தை இழந்துவிடாமல் இருப்பதற்கான  முயற்சிகளை செய்யவே மனதில் மறைந்திருக்கும் அகந்தை இடைவிடாமல் விழிப்புடன் போராடுகிறது.

▪ நாம் இதன்மூலம்  அகந்தை ஆன்மாவை விட்டு வெளியேறும் அனைத்து முயற்சிகளையும்  கட்டுப்படுத்துகிறோம்.

▪ இந்த மாதிரியான செயல்கள் நமக்கு ஆன்மிகப் பாதையில் பயணிப்பதைப் போன்ற ஒருவிதமான மாயத் தோற்றத்தை உருவாக்கும். ஆனால், உண்மையில் அப்போதும் நாம் போலியான நாமாக மட்டுமே இருக்கிறோம்.

▪ வாழ்க்கையின் யதார்த்தங்களை சந்திக்க நாம் பயப்படுகிறோம். எனவே அதிலிருந்து தப்பிப்பதற்காக அவற்றைக் கருத்தாக்கங்களாக வகைப்படுத்தவும், எளிதில் புரியாத பாசாங்குகளாகவும் மாற்றிடவும் அகந்தை விழைகிறது.

▪ நாம் வாழ்க்கையின் சூழ்நிலைகளை அதன் போக்கில் பார்க்கத் தயாராக இருக்க வேண்டும். அதை ஆன்மிகமாகவோ மறைபொருளாகவோ பார்க்க வேண்டிய அவசியமில்லை.

🔹உண்மையில் ஆன்மிகம் என்பது நமது நடத்தை, விழிப்பைக் கையாளும் அகந்தையின்  நிலைகளிலிருந்து விலகியிருப்பதே ஆகும்.

🔸இயல்பாக இருப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதே ஆன்மீகம்.

🔹உண்மையான ஆன்மிகப் பயணத்தில் பயணிக்கும்போது நமது பாசாங்குத்தனத்தைப் பார்த்து நம்மால் சிரிக்கமுடியும். ஆனால், போலியாக அகந்தையைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் தங்களது நகைச்சுவை உணர்வை முற்றிலுமாக இழந்துவிடுகிறார்கள்.

🔸 உண்மையான ஆன்மிகம் மிகவும் சாதாரணமானதும் கடினமானதுமாகும்.
அதில் நமது நம்பிக்கைகளை ஒப்படைத்துவிட்டு ஏமாற்றங்களுக்குப் பழகிக்கொள்ள வேண்டியிருக்கும்.

ஏமாற்றங்களை ஏற்றுக்கொள்வது அறிவின் அடையாளமாகும். ஏனென்றால், அது நமது அகந்தை, கனவுகளின் இருப்பை நிராகரிக்கிறது.


(என். கௌரி அவர்கள் இந்து நாளிதழ் எழுதிய கட்டுரையின் சுருக்கம்.)

7 கருத்துகள்:

  1. உண்மையான ஆன்மீகம் என்னவென்பதும், அகந்தையின் ஆளுகையும்
    தன்னை நிரூபிக்க அது மேற்கொள்ளும் இடையறாத போராட்டமும் அருமையாகச் சொல்லப்பட்டுள்ளது. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. 2003_ஆம் ஆண்டு திண்ணை இணைய இதழில் எழுதி, 2009_ல் என் வலைப்பூவிலும் பகிர்ந்த, ego குறித்த எனது கட்டுரை ஒன்று நினைவுக்கு வருகிறது: http://tamilamudam.blogspot.com/2009/06/blog-post_21.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ego குறித்த உங்களது சிந்தனைகளை மிகவும் அழகாகத் தொகுத்து வழங்கி இருக்கிறீர்கள். பின்னூட்டங்கள் மற்றும் பதில்கள் வாசிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது.

      வருகைக்கும் உங்கள் பதிவை பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. வாழ்வியல் உண்மைகள் அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது.
    - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு