நல்ல குணங்களைக் காத்துக் கொள்.
Good Character is not formed in a week or a month. It is created by little, a day by day. Protracted and patient effort is needed to develop good character. - Heraclitus of Ephesus.
சீர்மை எனும் வார்த்தைக்கு, ஒழுங்கமைப்பு (In order), சிறப்பு (excellence), புகழ் (reputation), நன்னடத்தை (Good behavior) எனப் பல அர்த்தங்கள் உள்ளது.
''சீர்மை மறவேல்'' என்பதற்குப் புகழுக்குக் காரணமான சிறப்பைத் தரும் நல்ல குணங்களை மறந்து விடாதே எனப் பொருள் கொள்ளலாம்.
சீர் என்பதற்கு தராசு எனும் அர்த்தமும் உண்டு. சீர்மை என்றால் தராசுமுள் போன்ற நடுவுநிலைமை. ஆக ''சீர்மை மறவேல்'' என்பதற்கு ''நன்மை தீமைகளைச் சீர்தூக்கிப் பார்த்து, நடுவுநிலைமை தவறாமல் வாழ்வதற்கு மறந்து விடக்கூடாது'' என்பது மற்றுமொரு விளக்கம்.
நற்குணங்களை எளிதாக உருவாக்கிட முடியாது. அதை அமைதியாக அடைந்து விடவும் இயலாது.
மனதில் உயர்ந்த இலட்சியம், சிறந்த குறிக்கோள் இவற்றை அடைய விட்டுக் கொடுக்காமல் போராடும் போது பல துயர சம்பவங்களை எதிர் கொள்ள நேரிடும். அந்த வேதனை அளிக்கும் சூழல் வலிகள் மிகுந்த அனுபவத்தைத் தரும். பெற்ற, கற்ற அனுபவங்கள் மனதை வலிமையாக்குகிறது. அந்த வலிமை பெற்ற மனதிலிருந்து நல்ல குணங்கள் பிறக்கின்றன.
ஒருவர் இயல்பான நிலையில் செய்யும் செயல்கள் வழியாக அவரது உண்மையான குணத்தைத் தெரிந்து கொள்ள முடியும்.
நல்ல பண்புகள் உடையவர்கள் பணம், அதிகாரம் இவற்றால் மயங்கிச் சூழலுக்குத் தக்கவாறு மாற மாட்டார்கள். இழிவான ஆதாயத்திற்காகத் தவறான செயல்களைச் செய்ய மாட்டார்கள்.
திறமைகள் மூலமாக உயர்ந்த இடத்தை அடைய முடியும். ஆனால் அந்த உயர்ந்த நிலையைத் தக்க வைக்க நல்ல குணம் அவசியம்.
குறளிருந்து சில கடைப் பிடிக்க வேண்டிய நல்ல குணங்கள் மற்றும் விட்டு விலக வேண்டிய தீய குணங்களை அறிந்து கொள்வோம்.
இறையச்சம்:
சிறு வயதில் அப்பாவிற்குப் பயப்படுவோம். அவரது வார்த்தைக்குக் கீழ்ப்படிவோம். அது தண்டனைக்கு அஞ்சுவதால் ஏற்படுவது.
ஆனால் நாம் முதிர்ச்சி பெறும் போது தந்தையின் வார்த்தையை மிகக் கவனமாக மதித்துக் கேட்டு நடப்போம். நம்மீது அவருக்கு உள்ள உண்மையான அக்கறையை நாம் உணர்ந்து கொண்டதால் அந்த மாற்றம் நிகழ்கிறது.
அது போல, இறையச்சத்தால் நல்ல செயல்களைச் செய்கிறோம். கடவுளுக்குப் பயப்படுவதே நல்ல குணங்கள் நம்மில் உருவாகத் தொடக்கப் புள்ளியாக இருக்கிறது. நற் பண்புகள் நமக்குள் உருவாகின்றது.
அவை நம் வாழ்வில் தரும் உயர்வு, மன நிறைவு, ஞானம், மேன்மை இவற்றால் இறைவனுக்கு நம் மீது உள்ள அன்பை உணர்ந்து கொள்ள முடிகிறது.
ஆக நற்பண்பு மிக்கவர் இறைவனுக்கு அஞ்சி அல்ல, அவரது பெருமையை, மேன்மையை உணர்ந்து இறை வார்த்தைக்குக் கீழ்ப் படிந்து நடக்கின்றனர்.
தாளை வணங்காத் தலை.
உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் அவை பயனற்றவையாகும்.
அது போல எட்டுக் குணங்களை உடைய ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்ட இறைவனின் திருவடிகளை வணங்கி நடக்காதவனின் தலையும் (அறிவும்) பயனற்றதாகும்.
பெருமை பிறங்கிற்று உலகு
நன்மை எது, தீமை எது என்பதை ஆராய்ந்து உணர்ந்து, இவ்வுலகில் அறநெறியை மேற்கொள்பவர்களே பெருமைக்குரியவர்கள்.
மனதில் தூய்மை:
ஆகுல நீர பிற.
ஒருவன் மனதில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும். அறம் அதுவே. மனத்தூய்மை இல்லாத மற்றவை எல்லாம் ஆரவாரத் தன்மை உடையவை.
பழி பாவத்திற்குப் பயப்படு:
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
நீர்மை யுடையார் சொலின்
நல்ல பண்பு உடையவர் பயனில்லாத சொற்களைப் பேசுவாரெனில், அவருடைய மேன்மை அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.
தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பை ஏழேல் பிறவிகளிலும் மறவாது நினைத்துப் போற்றுவர் பெரியோர்.
நடுநிலை தவறாதே:
கோடாமை சான்றோர்க் கணி
தன்னைச் சமமாகச் செய்து கொண்டு, பின்பு பொருளைச் சீர் தூக்கிக் காட்டும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாகச் சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.
ஆற்றின் அடங்கப் பெறின்
அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப ஒருவர் நல்வழியில் அடக்கமாக வாழ்ந்தால், அவரது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவருக்குப் பெருமையைக் கொடுக்கும்.
ஒழுக்கம் உயிரினும் பெரிது:
உயிரினும் ஓம்பப் படும்.
பிறன் மனைவியை விரும்பாதே:
இகவாவாம் இல்லிறப்பான் கண்
தீமையைப் பொறுத்துக் கொள்:
பொன்றுந் துணையும் புகழ்
தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்றைய ஒரு நாள் மட்டுமே இன்பம். அந்த தீமையைப் பொறுத்தவருக்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும்.
ஒருவர் எவரிடமும் பொறாமை கொள்ளாத பெருந்தன்மை பெற்றால், அவருக்கு அதைவிடச் சிறந்த சிறப்பு வேறு ஒன்றும் இல்லை.
பிறர் பொருளை விரும்பாதே:
மாண்டற் கரிதாம் பயன்
ஒருவன் முகத்திற்கு எதிரே முகதாட்சிணியம் இல்லாமல் நேரில் கடுமையாகப் பேசினாலும் பேசலாம். அவன் எதிரில் இல்லாமல் இருக்கும்போது பின்விளைவைக் கருதாமல் எந்தப் பழியையும் பேசக் கூடாது.
தீங்கு தரும் செயலை மறந்தும் நினைக்காதே:
தீயினும் அஞ்சப் படும்.
பகிர்ந்து கொடு:
பெற்றான் பொருள்வைப் புழி
ஏழைகளின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும். அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.
இரக்கம். (அருள்):
அருளால் வரும் செல்வமே எல்லாச் செல்வங்களிலும் சிறந்த செல்வமாகும். அதைத் தவிர்த்த பொருளால் வாங்கப்படும் செல்வங்கள் இழிந்த மனிதரிடமும் உள்ளன.
புலால் மறுத்தல்:
பொருளல்ல தவ்வூன் தினல்
இரக்கம் எது என்றால் கொலை செய்யாமல் இருப்பதே. ஒரு உயிரைக் கொலை செய்தல் இரக்கம் இல்லாத தன்மை. அதன் இறைச்சியைத் தின்பது அறம் இல்லாதது.
தவம் - தியானம் - இறை வேண்டல்:
அற்றே தவத்திற் குரு
பிறரால் தனக்குச் செய்யப்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது, மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருப்பது ஆகிய இவையே தவம் என்பதன் இலக்கணம்.
ஏமாற்றக் கூடாது:
வாழ்வாரின் வன்கணார் இல்.
உண்மையிலேயே மனதாரப் பற்றுகளைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வாழ்கின்ற வஞ்சகர்களைவிட கொடியவர் எவரும் இல்லை.
திருடாதே:
ஆவது போலக் கெடும்.
திருடுவதால் சேர்க்கப்படும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி, முன் உள்ளதையும் சேர்த்து ஒன்றுமில்லாமல் அழித்துவிடும்.
உண்மை பேசு:
செய்யாமை செய்யாமை நன்று.
பொய் சொல்லாமல் ஒருவர் உண்மையைப் பேசி நன்மையையே செய்து வாழ்ந்தால் அவர் வேறு அறங்களைச் செய்யத் தேவை இல்லை.
சினம் அழிவு - கோபப் படாதே:
தன்னையே கொல்லுஞ் சினம்.
ஒருவர் துன்பம் நேராமல் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டுமானால், கோபத்தை அடக்கி ஆள வேண்டும் இல்லையேல் அக்கோபம், அவனையே அழித்துவிடும்.
மன்னிப்பு:
நன்னயஞ் செய்து விடல்.
நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே ஆகும்.
துன்பம் தரும் செயல்களைச் செய்யாதே:
மாணாசெய் யாமை தலை.
அருமை மாமா சீர்மை என்பது என்பது பெற்றோர்களின் வளர்ப்பு மற்றும் அவர்கள் வளர்கிற சூழல் அவர்களை உருவாக்குகிறது .
பதிலளிநீக்குஆம் உண்மை தான். குடும்ப சூழலும் பண்புகள் உருவாக்கத்தில் உறுதுணையாக இருக்கின்றது. நன்றி.
நீக்கு