ஞாயிறு, 28 ஜூலை, 2019

திருவாசகம் ஒரு எளிய அறிமுகம் - 2

திருவாசகம் ஒரு எளிய அறிமுகம் - 2


திருவாசகம் நூல் அமைப்பு


திருவாசகத்தில் 51 திருப்பதிகங்கள் உள்ளன. 

இவற்றுள் மொத்தம் 658 பாடல்கள் அடங்கியுள்ளன. 

இந்நூலில் 38 சிவதலங்கள் பாடப் பெற்றுள்ளன. 

சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல் என்னும் நான்கு பெரும் பகுதிகள் இதில் உள்ளன. 

இவற்றைத் தொடர்ந்து திருச்சதகம் 100 பாடல்களும், நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களையும், திருவெம்பாவை 20 பாடல்களையும், திருவம்மானை 20 பாடல்களையும் கொண்டது.

திருப்பொற் சுண்ணம் முதல் திருவுந்தியார் வரையுள்ள ஆறு பகுதிகள் 20 பாடல்களைக் கொண்டுள்ளன. 

மற்றவை பத்துப் பாடல்களைக் கொண்ட பதிகங்களாக உள்ளன.

"திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்." எனும் சொல் வழக்கு இந்நூலின் சிறப்பை பறை சாற்றும்.

மனிதன் இறைவனிடம் இறைஞ்சுவது திருவாசகம்.

இறைவன் மனிதனுக்குப் போதித்தது கீதை.

மனிதன் மானுடத்துக்கு ஒப்புவித்தது திருக்குறள்.

பன்னிரென்டு திருமுறைகளில் சிகரமாகப் போற்றப்படுவது திருவாசகம்.

நன்றி: தமிழ் விக்கி

4 கருத்துகள்:

  1. ஆன்மீகத் தேடல் உள்ளவர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக அமையும்..

    மதம் கடந்து ஏக இறைவனை பற்றிய பாடலாக திருவாசகப் பாடல்கள் இருக்கின்றது என்று நான் எண்ணுகிறேன்..

    தொடர்ந்து பதிவிடுங்கள்.. பகிருங்கள்..

    இக்காலத்து சண்டை சச்சரவுகளில் மூழ்கிப் போயிருக்கும் மக்களுக்கு ஒரு தெளிவு பிறக்க ஏக இறைவனைப் பற்றி அறிதல் மிக மிக அவசியம் தான்..!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. நல்ல பகிர்வு.

    /மனிதன் இறைவனிடம் இறைஞ்சுவது திருவாசகம்.

    இறைவன் மனிதனுக்குப் போதித்தது கீதை.

    மனிதன் மானுடத்துக்கு ஒப்புவித்தது திருக்குறள்./ ஆம், அருமையாகச் சொல்லிவிட்டுள்ளீர்கள்.


    பதிலளிநீக்கு