நீங்கள் எங்கு நிற்கிறீர்கள்?
மாஸ்லோவின் தேவை படியமைப்பு கோட்பாடு
Abraham Maslow (1908 - 1970)
முக்கியமான சில கேள்விகள்!!!
வாழ்க்கையின் முன்னேற்றம் எந்த அடிப்படையில் நிகழ்கிறது ?
எவை முன்னேற்றத்திற்கான உந்து சக்தி? (Motivational factors).
இந்தக் கேள்விகளுக்கான பதில் மிக எளிமையானது!
தேவைகள் மற்றும் விருப்பங்களே!!!
வாழ்க்கையில் நாம் தற்போது எந்த நிலையில் இருக்கிறோம் (Where we stands)?
எதிர் காலத்தில் எந்தத் திசையில் செல்வது?
வாழ்க்கையின் முன்னேற்றம் எந்த அடிப்படையில் நிகழ்கிறது ?
எவை முன்னேற்றத்திற்கான உந்து சக்தி? (Motivational factors).
என்பதைப் புரிந்து கொள்ள இந்தப் பகிர்வு உதவும்.
இந்தக் கேள்விகளுக்கான பதில் மிக எளிமையானது!
தேவைகள் மற்றும் விருப்பங்களே!!!
தேவைகள் மற்றும் விருப்பங்களே வாழ்வினை இயக்கும் எரிபொருளாகும். விருப்பங்கள் முடிவில்லாதவை. ஒரு தேவை நிறைவேறி மனம் திருப்தியுற்றதும் மற்றொரு விருப்பம் பிறக்கும். இவற்றைப் பூர்த்தி செய்வதே வாழ்க்கை பயணம்.
இவ்வித பல தொடர் தேவைகளை Maslow அவர்கள் 5 நிலைகளாக வகைப்படுத்தி ஒரு பிரமிடு வரைபட வடிவில் கட்டமைத்தார்.
இதை நாம் புரிந்து கொண்டால் சரியான திசையில் பயணிக்கலாம். நமது விருப்பங்களினை தரவரிசைபடுத்திடவும், முன்னுரிமைகளைத் தீர்மானிக்கவும் செயல்படுத்தவும் முடியும்.
இதை நாம் புரிந்து கொண்டால் சரியான திசையில் பயணிக்கலாம். நமது விருப்பங்களினை தரவரிசைபடுத்திடவும், முன்னுரிமைகளைத் தீர்மானிக்கவும் செயல்படுத்தவும் முடியும்.
மாஸ்லோவின் வரையறை
இந்த பிரமிட் வரைபடத்தில் காணப்படும் மூன்று நிலைகள், தேவைகள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ள.
A. அடிப்படைத் தேவைகள்.(Basis Needs)
B. உளவியல் தேவைகள் (Psychological Needs)
C. தன்னுணர்வு தேவைகள் (Self fulfilment Needs)
இந்தப் படிநிலை வரிசையில் பயணிக்கும் மனிதன் கீழ்நிலை தேவைகள் பூர்த்தியானவுடன் அதனை அடுத்துள்ள உயர்நிலை விருப்ப தேர்வுகள் நோக்கி உந்தப்படுவான்.
மக்களின் எண்ணிக்கையையும், தேவைகளின் படிநிலைக்கும் ஒரு எளியத் தொடர்பு உண்டு.
தேவைகள், விருப்பங்கள் உயர உயர, மக்களின் எண்ணிக்கை குறையும்.
A - அடிப்படைத் தேவைகள் (Basis Needs).
1. உடலியல் தேவைகள் (Biological Needs).
முதல் கட்டமாக மனிதர்களின் தேடுதல் இங்குத் துவங்குகிறது. காற்று, நீர், உணவு, பாலுறவு, தூக்கம், கழிவு வெளியேற்றம் மற்றும் ஏகநிலமை (Homostasis) இவையே அடிப்படைத் தேவைகள்.
இந்தத் தேடல் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானதும் கூட. இதை அடைய எந்தவித ஊக்குவிப்பும் (Motivational) தேவையில்லை.
2. பாதுகாப்பு தேவைகள் (Safety Needs).
அடிப்படைத் தேவைகளை தொடர்ந்து மனிதர்கள் இரண்டாவது நகர்வாகப் பாதுகாப்பு சூழல் நோக்கிப் பயணிக்கின்றனர். பாதுகாப்பு தொடர்பான காரியங்களை பொதுவாக தொழில் பாதுகாப்பு, உயிருக்குப் பாதுகாப்பு, உடைமைக்குப் பாதுகாப்பு, வன்முறை அற்ற இடம் என வகைப்படுத்தலாம்.
i. உடல் பாதுகாப்பு
ii. வேலைவாய்ப்பு
iii. அறநெறி
iv. குடும்ப உறவுகள்
v. ஆரோக்கியம்
vi. வள வாழ்வு ஆதாரங்கள்
B. உளவியல் தேவைகள் (Psychological Needs).
3. சமூகத் தேவைகள்( Love/Belonging needs).
குழுவாக, ஒரு கூட்டத்துடன் தன்னை அடையாளப்படுத்தி வாழ்வது மனிதனின் அடிப்படை பண்பு. அது ஒரு உளவியல் தேவை. அடிப்படைத் தேவைகள், பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்பு மூன்றாவதாக மனிதன் குடும்பம், நண்பர்கள், உறவினர் எனத் தனது வட்டத்தை விரிவுபடுத்துவான்.
நண்பர்கள் தெரிவு, உறவினர்கள் ஜக்கியம் பெரும்பாலும் சமூக அந்தஸ்தின் அடிப்படையிலேயே இருக்கும். விதிவிலக்குகள் இருக்கலாம்.
நண்பர்கள் தெரிவு, உறவினர்கள் ஜக்கியம் பெரும்பாலும் சமூக அந்தஸ்தின் அடிப்படையிலேயே இருக்கும். விதிவிலக்குகள் இருக்கலாம்.
தனது பாலியல் நெருக்கத்தை (Sexual Intimacy) பகிர விரும்புவதே இதன் உளவியல் அடிப்படை.
4. சமூக மேன்மை தேடுதல் (Esteem Needs).
நான்காம் கட்ட நிலையில் தான் என்கிற உணர்வு, தனித்த அடையாளம், தனது இருப்பு நிலை முன்னிருத்தல், சாதிக்க முற்படுதல், தன்னைக் கூட்டத்தில் இருந்து வேறுபடுத்துதல், பிறரை மதித்தல், பிறரால் மதிக்கப்படுதல் எனச் சமூக மேன்மையை நோக்கிச் செல்ல ஆர்வமும் முயற்சியும் வரும்.
உயர்பதவியினை விரும்புதல், சொத்துக்கள், வாகனங்கள் வைத்திருக்க ஆசைப்படுதல் போன்றவையும் இதில் அடங்கும்.
உயர்பதவியினை விரும்புதல், சொத்துக்கள், வாகனங்கள் வைத்திருக்க ஆசைப்படுதல் போன்றவையும் இதில் அடங்கும்.
C. தன்னுணர்வு தேவைகள் (Self fulfilment Needs)
5. தன்னலத் தேவை (Self-actualization).
முழுமையான வாழ்க்கை மகிழ்ச்சி என்பது பொறுப்புகளை ஏற்பதிலும் அதை நிறைவேற்றுவதிலும் அடங்கியிருக்கிறது. கடமைகளைச் செய்து முடிப்பது மன அமைதி மற்றும் திருப்தியை அளிக்கிறது.
வாழ்க்கை தேடலின் இறுதி நிலை தன்னல தேவையாகும். தன்னையுணர்தல் என்பது ஓர் மன முதிர்வு நிலை.
கீழ்க் கண்ட நடத்தைகளில் ஏற்படும் நாட்டங்களின் மூலம் மன முதிர்ச்சியை உணரலாம்.
மனிதனுக்கு கடைசியாகத் தோன்றக்கூடிய தேவைத் தன்னல தேவை (Self-actualization) ஆகும். இதன் பின் அவனுக்குத் தேவைகள் இருக்காது என மாஸ்லோ கோட்பாட்டில் கூறுகின்றார்.
மன முதிர்ச்சிக்கும் வயது வளர்ச்சியையும் தொடர்பு படுத்துவது கடினம். முதிர்ந்த வயதிலும் வாழ்வின் அடிப்படைத் தேவைகளை கூடப் பூர்த்தி செய்ய இயலாது தவிப்பவர்கள் ஏராளம் உண்டு.
இடைவிடாத முயற்சிகளும், சரியான விருப்பங்களை முன்னிலை செய்வதன் மூலமும் ஊக்கத்தையும் வாழ்விற்கு நல்லதொரு அர்த்தத்தையும் பெற்று கொள்ளமுடியும்.
வாழ்க்கை என்பது சந்தர்ங்களினால் ஆனது அல்ல. அது தேவைகள் மற்றும் விருப்பங்களின் தெரிந்தெடுப்புகளால் தீர்மானிக்கப்படுகிறது !!!.கீழ்க் கண்ட நடத்தைகளில் ஏற்படும் நாட்டங்களின் மூலம் மன முதிர்ச்சியை உணரலாம்.
- அறநெறி நடத்தல் (Morality) ,
- படைப்புகளை நேசித்தல், படைப்பாற்றல் (Creativity),
- தன்னிச்சை மறுமொழி (Spontaneity),
- சிக்கல்களுக்குத் தீர்வு காணும் ஆற்றல் (Problem Solving),
- பாரபட்சம் இல்லாத தன்மை (lack of prejudice),
- வாக்குறுதி (Assurance),
- தவறுகளை மன்னித்தல் (Kindnesses),
- உண்மை நிலை எற்பு (acceptance of facts).
மனிதனுக்கு கடைசியாகத் தோன்றக்கூடிய தேவைத் தன்னல தேவை (Self-actualization) ஆகும். இதன் பின் அவனுக்குத் தேவைகள் இருக்காது என மாஸ்லோ கோட்பாட்டில் கூறுகின்றார்.
மன முதிர்ச்சிக்கும் வயது வளர்ச்சியையும் தொடர்பு படுத்துவது கடினம். முதிர்ந்த வயதிலும் வாழ்வின் அடிப்படைத் தேவைகளை கூடப் பூர்த்தி செய்ய இயலாது தவிப்பவர்கள் ஏராளம் உண்டு.
இடைவிடாத முயற்சிகளும், சரியான விருப்பங்களை முன்னிலை செய்வதன் மூலமும் ஊக்கத்தையும் வாழ்விற்கு நல்லதொரு அர்த்தத்தையும் பெற்று கொள்ளமுடியும்.
நல்ல பகிர்வு.....
பதிலளிநீக்குநன்றி திரு.வெங்கட்!
நீக்குNice, Very Informative.
பதிலளிநீக்குThanks Mr.Narayanan.
நீக்குஅளவோடு அடக்குவதே வெற்றியின் குணம்...
பதிலளிநீக்குhttp://dindiguldhanabalan.blogspot.in/2013/09/Desire-Greedy.html
கருத்துக்கு நன்றி திரு.தனபாலன்!
பதிலளிநீக்கு