நேர்மை மனிதரின் நடத்தை பண்புகள்.
தனிப்பட்ட வாழ்க்கை அல்லது பணியிடத்தில் மிகச் சிறந்த உண்மையான மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு அரிதாகவே கிடைக்கும்.
அப்படிப்பட்ட பண்புடைய நபர்கள் வாழ்வில் இடைப்பட்டால் கவனமாக அவர்களது உறவைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
உண்மை விரும்பிகளிடம் காணப்படும் பொதுவான நடத்தை பண்புகள்.
1. பிறர் கவனத்தை அவர்கள் ஈர்க்க விரும்பமாட்டார்கள்.
2. பிறரால் விரும்பப்பட வேண்டும் என்பதற்காக முனைப்புக் காட்டமாட்டார்கள்.
3. மற்றவர்களின் நோக்கம், புரிதல் எந்தளவு என்பது அவர்களுக்குத் தெரியும்.
4. தங்களது திறமையைச் சார்ந்து மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.
5. எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே சொல்லுவார்கள். அவர்களுக்குச் சொல்லப்படும் வார்த்தை மதிப்பு மிக்கது.
6. ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள அவர்களுக்குச் சுருக்கமான விளக்கம் போதும்.
7. அவர்கள் மனவலிமையுடையவர்கள். எளிதில் உணர்வு வயப்பட மாட்டார்கள்.
8. தங்களை மிகுந்த அடக்கமுடையவராகக் காண்பிக்கமாட்டார்கள் அதே சமயம் பெருமை மிக்கவரும் இல்லை.
9. அவர்கள் நடத்தை சீரானதாக இருக்கும்.
10. அவர்கள் எதைப் பேசுகிறார்களோ அதைக் கடைப்பிடிப்பார்கள்.
சிறந்த பண்புகளை உருவாக்கிக் கொள்வோம்.
கடைப்பிடிக்க வேண்டிய சிறந்த குணநலன்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குநேர்மையாக இருப்பது என்பது எளிதானது இல்லை.
பதிலளிநீக்குஇன்றைய காலத்தில் மிகவுமே வலி மிகுந்தது.
ராஜன்.சே
உண்மைதான் Sir. ஆனால் கடைப்பிடிப்பவர்கள் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்கிறதாகத் தோன்றுகிறது. :).
நீக்கு