செவ்வாய், 1 அக்டோபர், 2019

தீர்ப்புகள் திருத்தப்படலாம்

மதிப்பீடு எளிதல்ல



(Our College batchmates reunion at Mangarai near Coimbatore - 13th Jan ' 2018)


"சிந்து" வகுப்பில் எப்போதும் முதலிடம்,
படு சுட்டி, கற்பூரம். 
இன்று மகிழ்ச்சியான இல்லத்தரசி! 

கடைசி பெஞ்ச் "கதிர்", 
நூறு குடும்பங்களை வாழ வைக்கும்
தொழில் முனைவர்!  

வளாகத்தில் அலங்காரமாகச்
செல்லக் குழந்தையாக
வளைய வளைய வலம் வந்த "வர்ஷினி",
கண்டிப்பு மிக்க கடுகடு ஆசிரியை!  

பெரும்பாலும் கண்டு கொள்ளாது 
அனைவராலும்
புறக்கணிக்கப்பட்ட "ஜோ",
நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்!  

கணிதத்தில் தேர்ச்சியடையாத "கார்த்தி"'
வெற்றிகரமான ஆடை வடிவமைப்பாளர்!  

வகுப்புக்கு வெளியே 
வாடிக்கையாக நிறுத்தப்படும் "ரவி",
எல்லையில் பணியாற்றும்
மதிப்புமிக்க இராணுவ அதிகாரி!  

பல வருடங்கள் கழித்து 
நாங்கள் மீண்டும் சந்தித்த
அந்த மகிழ்ச்சி நிறைந்த இனிய நன்னாள்
எனக்கு கற்றுத் தந்தது எல்லாம் : 

வாழ்க்கை தனது 
ஒவ்வொரு அடுக்குகளிலும்
மனிதர்களை மாற்றித்தகவமைக்கிறது என்பதே!  

அதிர்ச்சியும் ஆச்சரியத்திலும்
உறைந்து, அமைதியாக
இருந்த எனது காதோரத்தில்
இயற்கை மெலிதாக கிசுகிசுத்தது :

"ஒரு புத்தகத்தின் அட்டைப்படத்தை வைத்து 
அதன் உள்ளடக்கத்தை ஒரு போதும்
மதிப்பீடு செய்து விடாதே." 

ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் 
ஒரு வெற்றிக்கதையை
இயற்கை பொதிந்து வைத்திருக்கிறது.

*******   *******   ******* *******   *******


* Written Inspired by a English Poem shared by my friend.

4 கருத்துகள்:

  1. உண்மைதான். கூடவே எனது தோழிகள் பலர் நினைவுக்கு வந்தார்கள். அன்றைய அவர்களது குணாதிசயங்களுக்கும் தற்போது வகிக்கும் பொறுப்புகளுக்கும் இடையேயான முரண் வியப்புதான்.

    பதிலளிநீக்கு