காலமும் கதைகளும்
எங்கே அது புறப்பட்டதோ,
அங்கே அது திரும்ப வேண்டும்.
செயல்களின் விளைவுகளால்
ஓர் உரு மாற்றத்தைத் தேடி
அது பயணிக்கிறது.
அறிந்தோ, அறியாமலோ,
விரும்பியோ, விரும்பாமலோ
நாம் எழுதிய கதைகளில்
இருந்தே நாடகத்தின்
காட்சிகள் விரிகின்றன.
காலவெளியில்
பயணிக்கும் செயல்கள்
குறித்த நேரத்தில்
திசை திரும்பி
வளைய வருகிறது.
வளைக்க வருகிறது.
தாமதமும் அல்ல,
விரைவாகவும் அல்ல,
அது அதன் நேரத்தில்
சரியாகவே வருகிறது.
அவை எதிரொலிகள்.
எதிர்வினை சங்கடங்கள்
சந்திக்க நேரிடும் போது
மனதை அமைதியாக்கு.
வலி மிகும் நேரங்களில்
வருத்தத்தை ஏற்றுக்கொள்.
உண்மை உணர விரும்பினால்
உள் நோக்கி உற்றுப் பார்.
அறியாமை இருளில்,
மதி மயக்கத்தில்,
வலி உணராது வலி தந்ததும்,
வலி அறிந்தும் அலட்சியமாகப்
பயணித்த மூட வருடங்கள்
சட்டென நினைவு திரைகளில்
காலம் அல்லவோ
மறு ஒளிபரப்பு செய்கிறது.
தேவை அது செய்யவில்லை,
செய்தவை பல தேவையற்றது.
அன்று காலம் பொறுமையுடன்
அமைதி காத்தது.
இன்று,
கற்றுக் கொள்வாயா?
கடந்து செல்வாயா?
எதைத் தெரிவு செய்வாய்?
தெரிந்து கொள்ளக்
காலமும் ஆவலுடன்
காத்திருக்கிறது.
மனித மன மாற்றங்களை
உருவாக்குவதும்,
நகைப்பதும்,
இரசிப்பதும்,
தாழ்த்தி உணர்த்துவதும்,
உயர்த்தி மகிழ்வதும்
காலத்தின் திருவிளையாடல்.
அது சுழன்று சுழன்று
ஓயாமல் படிப்பிக்கிறது.
மாற மனமிருந்தால்
அனுபவங்களும் ஆசான்.
அதுவே விழிப்பு.
அதுவே சாட்சி.
அதுவே சப்தம்.
அதுவே உள் ஒளி.
தனிமைச் சிறையில்
கர்ம சங்கிலி அறுபடுகிறது.
புதிய கதைகள் எழுத
வாசல்கள் திறக்கப்படுகிறது
மீண்டும் நடிக்கத் துவங்கும்முன்
புரிந்து கொள்,
அவைதான் எதிர்காலத்தின் நீ.
சிறந்த கதைகள்
வசீகர எழுத்துக்களால்
கோர்க்கப்படுவதில்லை.
வலிகளினால்
செதுக்கப்படுகின்றன.
மதிப்புமிகு வேடம்
அணிய விரும்பினால் :
புத்தி தெளிந்து,
தவற்றை உணர்ந்து,
மனம் வருந்தி,
பற்கள் கடிக்காது,
பொங்கி எழாது,
நியாயப்படுத்தாது,
வலியைப் பொறுத்து,
உண்மை உணர்ந்து,
பொறுமையுடனும்,
பொறுப்புடனும்,
சரியான பாதையைத்
தெரிவு செய்.
இடுக்கமான வாசல் வழிப்
பயணம்தனை தொடர்.
அழிவின் வாசல் விசாலம்,
அதில் பயணிப்பவர் அநேகர்.
கரடு முரடான பாதைகளில்
பயணிக்க விழிப்புணர்வு தேவை.
நீரின் போக்கில் நீந்துவது எளிது.
விட்டு விட வேண்டியது எது?,
தொட்டுத் தொடர வேண்டியது எது?
என அறிவதை விட
வாழ்வின் மேன்மை தான் என்ன?
வந்த வண்ணமே செல்வதற்கு
எதற்கு இங்கு வர வேண்டும்?
இச்சைக் குதிரைகள்
ஐந்தின் கடிவாளத்தை
மனதிலிருந்து வேரறுத்து
புத்தியின் வசம் ஒப்படை
ஒழுங்கு படுத்து.
கற்றுக் கொள்.
கடைப்பிடி.
நிலைத்திரு.
இன்று நீ
தனித்திருந்து சீர் செய்வது
நாளைய சிறப்புப் பக்கங்கள் .
நீ விரும்பும்
உனது கனவுகளை
உறங்காது சிந்தையில் எழுது.
எழுதத் தவறியவர்களும்,
இயலாத சோம்பேறிகளும்
பிறரது கதையின்
துணை கதாபாத்திரங்களாக
மட்டுமே வலம் வர முடியும்.
துயரத்தில் உதித்த
கண்ணீர் நதியின்
நினைவுத் தடங்கள்
வறண்டு வற்றி
தழும்புகளாக உருமாறட்டும்.
கொஞ்சம் பொறு
காலம் உருமாறும்!
காரிருள் கடந்து
வெளிச்சக் கீற்றுகள்
உதிக்கும்.
பனிபடர்ந்த
பச்சை புல்வெளியில்
பாதம் பதிய
வண்ணக் கனவுகளுடன்
உலாவரும்
சுகானுபவம்
மீண்டும் மலரும்.
அந்தத் தருணத்தில்
தழும்புகளைத் தடவிப்
பார்க்க மட்டும்
ஒருபோதும்
மறந்து விடாதே.
ஏனெனில் தோல்விகளை விட
வெற்றிகளே வெறி கொள்ள
வைத்து வீழ்த்திவிடும்.
எச்சரிக்கையுடன்
விழித்திரு.
புத்தி எழுது முயற்சிக்கும்
கதைகளை விட
மனது விரும்பும் கதைகள்
அவ்வளவு எளிதாக
அழிவதில்லை.
அழுது எழுது,
அழியாதவாறு
அழுத்தமாக எழுது.
Kindly note that the "Pictures" used in these blogs are taken from different sources with thanks. This is a non - commercial blog intended to share the personal experiences as well as translations towards spread the knowledge.
//இன்று,
பதிலளிநீக்குகற்றுக் கொள்வாயா?
கடந்து செல்வாயா?
எதைத் தெரிவு செய்வாய்?
தெரிந்து கொள்ளக்
காலமும் ஆவலுடன்
காத்திருக்கிறது.//
ஆழமாக சிந்திக்க வைக்கிறது சார்..!
மிக்க நன்றி.
நீக்குசிந்திக்க வைக்கும் வரிகள் அடங்கிய பதிவு..!
பதிலளிநீக்குஅருமை...
நன்றி பூங்குன்றன்.
நீக்கு
பதிலளிநீக்குபுத்தி தெளிந்து,
தவற்றை உணர்ந்து,
மனம் வருந்தி,
பற்கள் கடிக்காது,
பொங்கி எழாது,
நியாயப்படுத்தாது,
வலியைப் பொறுத்து,
உண்மை உணர்ந்து,
பொறுமையுடனும்,
பொறுப்புடனும்,
சரியான பாதையைத்
தெரிவு செய்.
இச்சைக் குதிரைகள்
ஐந்தின் கடிவாளத்தை
மனதிலிருந்து வேரறுத்து
புத்தியின் வசம் ஒப்படை
புத்தி எழுது முயற்சிக்கும்
கதைகளை விட
மனது விரும்பும் கதைகள்
அவ்வளவு எளிதாக
அழிவதில்லை.
👌👌👌
மிக்க நன்றி குமாரவேல்.
நீக்கு
பதிலளிநீக்குஇன்று,
கற்றுக் கொள்வாயா?
கடந்து செல்வாயா?
எதைத் தெரிவு செய்வாய்?
தெரிந்து கொள்ளக்
காலமும் ஆவலுடன்
காத்திருக்கிறது.
புத்தி தெளிந்து,
தவற்றை உணர்ந்து,
மனம் வருந்தி,
பற்கள் கடிக்காது,
பொங்கி எழாது,
நியாயப்படுத்தாது,
வலியைப் பொறுத்து,
உண்மை உணர்ந்து,
பொறுமையுடனும்,
பொறுப்புடனும்,
சரியான பாதையைத்
தெரிவு செய்.
கொஞ்சம் பொறு
காலம் உருமாறும்!
காரிருள் கடந்து
வெளிச்சக் கீற்றுகள்
உதிக்கும்.
பனிபடர்ந்த
பச்சை புல்வெளியில்
பாதம் பதிய
வண்ணக் கனவுகளுடன்
உலாவரும்
சுகானுபவம்
மீண்டும் மலரும்.
மேற்கண்ட அற்புத வரிகளின்மூலம் நீவிர் வாழ்க்கையை எளிதாக விளக்குவதில் ஞான நிலையை தொட்டு விட்டீர் எனலாம்..
மிக்க நன்றி செந்தில்
நீக்குவாழ்வின்
பதிலளிநீக்குஎதார்த்தமான உண்மைகள்..
அனுபவத்தினால்
அழகாய்
வர்ணிக்கப்பட்டுள்ளது..
நன்றி..
மிக்க நன்றி.
நீக்குஉங்கள் பதிவை இன்றுதான் முதன்முதலாகப் பார்க்கின்றேன். மகிழ்ச்சி தருகிறது. குறிப்பாக,
பதிலளிநீக்கு"அழுது எழுது, //அழியாதவாறு //அழுத்தமாக எழுது"
என்னும் வரிகள் கவனத்தைக் கவர்கின்றன. வாழ்த்துக்கள்!
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஐயா.
நீக்கு