திங்கள், 27 ஏப்ரல், 2020

வெளிச்சம் நல்லது.

உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! 


வெளிச்சம் பாதுகாப்பான உணர்வைத் தருகிறது. இருள் திகிலையும் பயத்தையும் ஏற்படுத்துகின்றன.

வெளிச்சம் நம்பிக்கையை அளிக்கிறது. இருள் தவிப்பையும், தடுமாற்றத்தையும், தத்தளிப்பையும் தருகிறது.

வெளிச்சம் உற்சாகத்தைத் தருகிறது. இருள் மனச் சோர்வை உண்டாக்குகிறது.

வெளிச்சம் மகிழ்ச்சி. இருள் துயரம்.

வெளிச்சம் புத்துணர்ச்சி.  இருள் முடக்கம்.

இருள் அகல வேண்டுமெனில் ஒளி உதிக்க வேண்டும். அதுவே ஒரே வழி.

நமது உடல் ஆலயம். உள்ளம் அதில் ஓர் விளக்கு. இறைமையின் ஊற்றில் மூழ்குபவர்க்கு எண்ணெய் நற்சிந்தனைகளாகச் சுரக்கிறது. வாழ்க்கை என்னும் திரி எண்ணெய்யில் தோயும்போது நற்செயல்கள் தீபமாக எரிந்து பிரகாசிக்கிறது.

இரவு கவிழ்ந்த சாலையில் தனியாக  நடக்கிறோம். மனம் பதற்றமடைகிறது. தெருமுனை முடிந்து வீட்டின் வெளிச்சம் கண்டவுடன் மனதில் நிம்மதி பிறக்கின்றது. பாதுகாப்பாக உணர்கிறோம்.

நள்ளிரவில் மீனவர்கள் படகில் திரும்புகிறார்கள்.  கலங்கரை விளக்கின் வெளிச்சம் தென்படுகிறது.  நம்பிக்கையும் உற்சாகமும் தொற்றிக் கொள்கின்றன.

காரிருளின் மின்னி மின்னி கண் சிமிட்டும் நட்சத்திரங்கள் உற்சாகத்தை, புத்துணர்வைத் தருகிறது.

நீல வானில் உலா வரும் நிலா கவிஞன் மனதின் கற்பனை சிறகை விரிக்க வைக்கிறது.

மலைகளின் மீது அமைந்த நகரம் அழகாகக் காட்சியளிக்கிறது. பனிபடர்ந்த பின்னிரவின் பொன்னிற ஒளியில் அது மனதை மகிழ்விக்கிறது.

வெளிச்சம் எத்தனை அழகு!

சிந்தனைக்கு இரு கேள்விகள் :

எவை  பாதுகாப்பு, நம்பிக்கை, உற்சாகம், புத்துணர்வு, மகிழ்ச்சியை  நமக்கு எப்போதும் தருகின்றது?

நாம் பாதுகாப்பு, நம்பிக்கை, உற்சாகம், புத்துணர்வு, மகிழ்ச்சியை  நம்மைச் சுற்றி வாழ்பவர்க்குத் தருகிறோமா?

சிறந்த வாழ்க்கை என்பது எரிந்து பிரகாசிப்பது.

நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். 

*******   *******   *******

Thoughts from Bible Sources [St. Mathew 5:14-16, St. Mark 4:21-22, St. Luke : 8:16, 11:33]

Kindly note that the "Pictures" used in these blogs are taken from different sources with thanks. This is a non - commercial blog intended to share the personal experiences as well as translations and explanations towards spread knowledge.

4 கருத்துகள்:


  1. நமது உடல் ஆலயம். உள்ளம் அதில் ஓர் விளக்கு. இறைமையின் ஊற்றில் மூழ்குபவர்க்கு எண்ணெய் நற்சிந்தனைகளாகச் சுரக்கிறது. வாழ்க்கை என்னும் திரி எண்ணெய்யில் தோயும்போது நற்செயல்கள் தீபமாக எரிந்து பிரகாசிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறையருள் இருந்தால் மட்டுமே நற்செயல்கள் செய்ய முடியும் எனும் அனுபவத்திலிருந்து எழுந்த வார்த்தைகள். உங்களுக்கும் அந்த வாக்கியங்கள் பிடித்திருப்பது மிக்க மகிழ்ச்சி. நன்றி குமாரவேல்.

      நீக்கு