அழுகை - ஏழு நிலைகள்.
மனநிலையில் ஏற்படும் ஏழு விதமான பாதிப்புகளால் அழுகை ஏற்படுகிறது என மஜீத் இப்னு மைஸரா ரஹ்மத்துல்லாஹி அவர்கள் குறிப்பிடுகிறார்.
2. மன அழுத்தம், (புத்தி பேதலித்த நிலை)
3. வேதனை
4. திடுக்கிடும் அதிர்ச்சி சூழல்
5. நடிப்பு
6. போதையில் (தன்னிலை மறந்து)
7. இறை அச்சம், (பாவத்தைக் குறித்த மன வருத்தம்.)
மனம் வருந்தி இறையச்சத்தில் செய்யும் பிரார்த்தனை மிக வலிமை பெற்றது.
இறை வேண்டலில் சிந்தப்படும் கண்ணீர் நெருப்புக் கடலையும் அனைத்து விடும் தன்மை பெற்றது.
இறைமைக்குப் பயந்து அழுது வடித்த கண்ணீர் பட்ட இடத்தை நரக நெருப்பு தீண்டாது.
"நீங்கள் பிரார்த்தனையில் சிந்தும் கண்ணீர் இறைவனின் கைகளில் உள்ள துருத்தியில் அல்லவோ வைக்கப்பட்டிருக்கிறது" என வேதம் சொல்கிறது.
மனம் உருகி இறையச்சத்தோடு கண்ணீர் சிந்திச் செய்யப்படும் வேண்டுதலின் பலனை வார்த்தைகளால் எழுதிவிட முடியாது.
நியாயத்தீர்ப்பு நாளில் இறையரசின் நிழலில் இளைப்பாறும் ஏழு நபர்களில் ஒருவர் நிச்சயமாக, "தனிமையிலிருந்து இறைவனை நினைத்துப் பயந்து கண்ணீர் வடித்தவராக வாழ்ந்தவராக இருந்திருப்பார்" என இறை நூலில் எழுதப்பட்டுள்ளது.
ஒரு இறையடியவரின் கண்களில் நோய் ஏற்பட்டிருந்தது.
அவரைப் பரிசோதித்த மருத்துவர், "இனிமேல் அழுது பிரார்த்தனை செய்வதில்லை என வாக்களித்தால் கண்கள் குணமடைந்துவிடும்" என்றார்.
அதற்கு "இறைமையை நினைத்து அழாத கண்களினால் எவ்வித நன்மையுமில்லையே" என அவர் பதிலுரைத்தார்.
"துயரப்படுகிறவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்."( Blessed are those who mourn, for they shall be comforted) எனும் இயேசு கிறிஸ்து கூறிய வார்த்தையின் மெய்ப் பொருளை யார் உணர்வார்?
"இறைமையை நினைத்து அழாத கண்களினால் எவ்வித நன்மையுமில்லையே"
பதிலளிநீக்கு🙏🙏🙏
நன்றி குமாரவேலு.
நீக்குநன்றி
பதிலளிநீக்குவணக்கம் ரவி :)
நீக்கு