ஆத்திசூடி - நல்லொழுக்கங்களை நிலைக்கச் செய்தல்.
- "காப்பது விரதம்" எனும் ஆத்திசூடியின் பொருள் :
காப்பது என்பது காப்பாற்றுவது, பாதுகாப்பது, கடைப்பிடிப்பது எனப் பொருள் கொள்ளலாம்.
அப்படி என்றால் "காப்பது விரதம்" எனும் ஆத்திசூடியின் பொருள் :
பிற உயிரினங்களை, இயற்கையைப் பாதுகாப்பது நீதி.
நல்லொழுக்கங்களை உறுதியுடன் கடைப்பிடித்தல் நீதி.
உணவை மறுத்து இறைவனைத் தொழுவது விரதம், நோன்பு அல்லது உபவாசம் எனச் சொல்லப்படுகிறது.
அப்படி என்றால் "காப்பது விரதம்" எனும் ஆத்திசூடியின் பொருள் :
பிற உயிரினங்களை, இயற்கையைப் பாதுகாப்பது நீதி.
நல்லொழுக்கங்களை உறுதியுடன் கடைப்பிடித்தல் நீதி.
- விரதம் - நோன்பு - உபவாசம்.
உபவாசத்தின் அடிப்படை உணவையும் மறுத்து இறைவனிடம் இனைந்து அவர் சமூகத்தில் தரித்திருப்பது.
நோன்பு என்பது இறைவனது கட்டளைகளைக் கைக்கொள்ளும்படி மனதை உறுதிப் படுத்துவதற்காக மனதுக்கு அளிக்கப்படும் ஒருவகைப் பயிற்சி.
இது ஒவ்வொரு சமயமும் குறிப்பிட்ட காலத்தில் கடைப்பிடிக்கும்படி வலியுறுத்தும் ஒரு சமய நல்லொழுக்கம்.
ஒவ்வொரு சமயத்திலும் விரதத்துக்கு என சில நியதிகள், ஒழுங்குகள் கடைப்பிடிக்கும்படி நியமிக்கப்பட்டுள்ளது.
அவை மனதைச் சீர்படுத்தவும் இறைவனை நோக்கி ஒருமுகப்படுத்தவும் அமைக்க.பட்டுள்ளன. அவை உயர்ந்த சிந்தனை மற்றும் ஆழ்ந்த பொருள் உடையது.
வாழ்வில் பெற்றுக் கொண்ட நன்மைகளுக்கு இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் விரதம் ஏற்றெடுக்கப்படுகிறது.
மறைந்த முன்னோர்களை நன்றியுடன் நினைவு கூறும் விதத்திலும் விரதம் அனுசரிக்கப்படுகிறது.
வாழ்வில் சில குறிப்பிட்ட காரியங்களை அடைய விரும்பி நேர்ச்சையுடன் விரதம் ஆசரிக்கப்படுகிறது.
வெறும் உண்ணாமல் இருப்பது உபவாசம் இல்லை. இறைவனது பிரசன்னத்தில் அமர்ந்திருப்பதுவே விரதம்.
அப்போது விரதம் மனதை ஒருமுகப்படுத்துகிறது. புலன்களைக் கட்டுப்படுத்துகிறது. வாழ்வின் தடைகளை அகற்றுகிறது. புது வழியைத் திறக்கிறது. மனதிற்கு நம்பிக்கை அளிக்கிறது. நல்லொழுக்கப் பாதையில் நடக்கச் சக்தி அளிக்கிறது.
ஒவ்வொரு சமய முன்னோடிகளும் நோன்பிருந்தே இறை வாக்குகளைப் பெற்றனர்.
வாழ்வில் விட முடியாத தீய பழக்கங்களிலிருந்து விடுதலை பெற நோன்பிருத்தல் உதவுகிறது.
விரதம் உடலையும் தூய்மை செய்கிறது. உடல் நலிவுற்றவர், நோய் வாய்ப்பட்டவர், சிறு குழந்தைகள் தவிர்த்து மற்றவர் வாரத்தில் ஒரு நாளானாலும் உபவாசம் கடைப்பிடித்து இறை வேண்டல் செய்வது வாழ்வை சுபிட்சமுன்டாகும்.
கிறிஸ்தவ திருமறையில் இறைவன் விரும்பும் விரதம் இது என ஒரு தீர்க்கதரிசி எழுதியுள்ளார்.

- இயேசு கிறிஸ்து விரதம் பற்றிக் கூறியது :
நீங்கள் விரதம் இருக்கும்போது, "வெளி வேஷக்காரர்களைப் போல் முகத்தைச் சோகமாக வைத்துக்கொள்ளாதீர்கள்; தாங்கள் விரதம் இருப்பது மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக அவர்கள் தங்களுடைய முகத்தை அவலட்சணமாக வைத்துக்கொள்கிறார்கள்.
உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மனுஷர்களிடமிருந்து கிடைக்கிற புகழைத் தவிர வேறெந்தப் பலனும் அவர்களுக்குக் கிடைக்காது.
நீங்களோ விரதம் இருக்கும்போது உங்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள்; அப்போது, நீங்கள் விரதம் இருப்பது மனிதர்களுக்குத் தெரியாது,
ஆனால் எல்லாவற்றையும் பார்க்கிற உங்கள் இறைவனுக்குத் தெரியும். அதனால், எல்லாவற்றையும் பார்க்கிற உங்கள் கடவுள் உங்களுக்குத் தகுந்த பலன் கொடுப்பார்.
- இறைவன் விரும்பும் விரதம்
கிறிஸ்தவ திருமறையில் இறைவன் விரும்பும் விரதம் இது என ஒரு தீர்க்கதரிசி எழுதியுள்ளார்.
நீங்கள் உங்கள் உணவைப் பசித்தவர்களோடு பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.
நீங்கள் வீடற்ற ஏழை ஜனங்களைக் கண்டுபிடித்து, அவர்களை உங்கள் வீட்டிற்கு அழைத்து வருவதை நான் விரும்புகிறேன்.
ஆடையில்லாத ஒரு மனிதனை நீங்கள் பார்க்கும்போது, உங்கள் ஆடைகளை அவனுக்குக் கொடுங்கள். அவர்களுக்கு உதவாமல் ஒளிந்துகொள்ளாதீர்கள். அவர்கள் உங்களைப்போன்றவர்களே.
இதுவே எனக்குப் பிரியமான நோன்பு.
நீங்கள் இவற்றைச் செய்தால், உங்களது வெளிச்சம் விடியற்கால சூரியனைப்போன்று ஒளிவீசத் தொடங்கும். பிறகு, உங்கள் காயங்கள் குணமாகும்.
உங்கள் நன்மை உங்களுக்கு முன்னால் நடந்து செல்லும். இறைவனுடைய மகிமை உங்களைப் பின்தொடர்ந்துவரும்.
பிறகு நீங்கள் கடவுளை அழைப்பீர்கள். அவர் உங்களுக்குப் பதில் சொல்வார். நீ இறைவனிடம் சத்தமிடுவாய். அவர் “நான் இங்கே இருக்கிறேன்!” என்பார்.
உண்மையான நோன்பிருத்தல் இதயத்தில் இறையன்பை ஊற்றெடுக்கச் செய்யும்.
உண்மையான நோன்பிருத்தல் இதயத்தில் இறையன்பை ஊற்றெடுக்கச் செய்யும்.
மனம் மற்றும் உடம்பை
பதிலளிநீக்குவிரதம் அமைதிப்படுத்துகிறது
என்பதை சொன்னால் மட்டுமே புரியாது.
அனுபவிப்பவர்களுக்கே முழுமையாக புரியும்.
ராஜன். சே
உண்மை Sir.
நீக்குபிரார்த்தனையுடன் கூடிய விரதம் மன அமைதியுடன் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தைரியத்தையும் அருள்கிறது.
நல்லதொரு கருத்துரைக்கு நன்றி Sir.