புதன், 13 மே, 2020

நிழல் யுத்தம்

ஓயாத போர்.



காரிருளிலிருந்து
ஒளி உதித்த போது
நிழலும் உடனிருந்தது

நிழல் முன் செல்கிறது
நிழல் பின் தொடர்கிறது
நிழல் படர்கின்றது
தீப ஒளியினுள் கருஞ் சுடராக
நிழல் உள் உறைந்துள்ளது

பள்ளிப் பருவத்தில்
நிழல் முகத்தை
மிதிக்கத் துடித்து
எட்டி எட்டி நடைபோட்டு
ஏமாந்த தருணத்தில்
நிழல் நகைத்தது

திரையினின்றும்
அருவமாக அசைந்து
எழுந்த பிம்பங்கள்
கற்பனையில் உருப்பெற்று
மாயக் கனவுகளாக விரிந்து
மனதை முடக்கிய போது
நிழல் முறுவலித்தது

அரவமற்ற மெல்லிய
இருட்டின் நிழலில்
மதி மயங்கி
மறைந்திருந்து துய்த்த
கானல் இன்பங்களில்
களி கூர்ந்தபோது
நிழல் குதுகலித்தது

உள் ஒளி உதித்து
எண்ணங்களின் மீது
வெளிச்சம் பரவி
ஆன்மாவில் உணர்வுகள்
கிளர்ந்தெழுந்து
மனக் கண்கள் விழித்ததில்
நிழல் எரிச்சலானது

வெளிச்ச கீற்று
நினைவுகளில் படர
மறைந்து திளைத்த
அனுபவங்கள்
வெட்கமாகிக் கசந்து
கண்ணீரில் கரைய
நிழல் சினமடைந்தது

மனக்கண்கள் பிரகாசித்து
மறுரூபமடைந்த இதயத்திலிருந்து
ஊற்றெடுத்த
நன்றியுணர்வின்
வெம்மை தாங்காது
வீழ்த்துவேன் எனும்
சபதத்துடன் வெட்கி
நிழல் வெளியேறியது

நிஜமும் நிழலும்
பிரிவதுமில்லை
இணைவதுமில்லை
இடைவிடா யுத்தம்
தொடர்கிறது

உணர்வு வெளிச்சத்தின்
மீது நிழலால் வீசப்படும்
மாய வலையில்
மானுடத்தின்
கண்கள்
பார்வையிழக்கின்றன
செவிகள்
கேட்க மறுக்கின்றன
உள்ளம் கள்ளமாகிறது

உணர்ந்து தெளியும் வரை
பாடம் தொடர்கிறது
கால ஓட்டத்தில்
கற்பதும் மறப்பதும்
பதிவுமாக வாழ்க்கை
கடக்கிறது

உள் ஒளி மறைந்து
காரிருள் கவ்வும்போது
பல நிழலில் கரைகிறது
சில ஒளியில் சங்கமிக்கிறது

வெளிச்சம் உதிக்கையில்
நிழலின் மரணம்
ஆசைகளின் ஈர்ப்பில்
நிழலின் ஜனனம்

Kindly note that the "Pictures" used in these blogs are taken from different sources with thanks. This is a non - commercial blog intended to share the personal experiences as well as translations and explanations towards spread knowledge.

6 கருத்துகள்:

  1. நிஜமும் நிழலும்
    பிரிவதுமில்லை
    இணைவதில்லை
    இடைவிடா யுத்தம்
    தொடர்கிறது..

    அருமை..

    பதிலளிநீக்கு

  2. உள் ஒளி உதித்து
    எண்ணங்களின் மீது
    வெளிச்சம் பரவி
    ஆன்மாவில் உணர்வுகள்
    கிளர்ந்தெழுந்து
    மனக் கண்கள் விழித்ததில்
    நிழல் எரிச்சலானது

    வெளிச்ச கீற்று
    நினைவுகளில் படர
    மறைந்து திளைத்த
    அனுபவங்கள்
    வெட்கமாகிக் கசந்து
    கண்ணீரில் கரைய
    நிழல் சினமடைந்தது

    மனக்கண்கள் பிரகாசித்து
    மறுரூபமடைந்த இதயத்திலிருந்து
    ஊற்றெடுத்த
    நன்றியுணர்வின்
    வெம்மை தாங்காது
    வீழ்த்துவேன் எனும்
    சபதத்துடன் வெட்கி
    நிழல் வெளியேறியது

    நிஜமும் நிழலும்
    பிரிவதுமில்லை
    இணைவதுமில்லை
    இடைவிடா யுத்தம்
    தொடர்கிறது

    உணர்வு வெளிச்சத்தின்
    மீது நிழலால் வீசப்படும்
    மாய வலையில்
    மானுடத்தின்
    கண்கள்
    பார்வையிழக்கின்றன
    செவிகள்
    கேட்க மறுக்கின்றன
    உள்ளம் கள்ளமாகிறது

    உணர்ந்து தெளியும் வரை
    பாடம் தொடர்கிறது
    கால ஓட்டத்தில்
    கற்பதும் மறப்பதும்
    பதிவுமாக வாழ்க்கை
    கடக்கிறது

    உள் ஒளி மறைந்து
    காரிருள் கவ்வும்போது
    பல நிழலில் கரைகிறது
    சில ஒளியில் சங்கமிக்கிறது

    வெளிச்சம் உதிக்கையில்
    நிழலின் மரணம்
    ஆசைகளின் ஈர்ப்பில்
    நிழலின் ஜனனம்

    நிழல் என்பது நம்மிடமுள்ள எதிர்மறை எண்ணங்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். வாசிப்பவரின் அடிப்படை சுதந்திரம் அது. ஒவ்வொருவர் அனுபவத்தின் தன்மையில் கற்பனைகள், அனுமானங்கள் வாசிக்கும்போது சிந்தனைகளாக விரியும்.

      மிக்க நன்றி குமாரவேலு.

      நீக்கு
  3. நிழல் என்பதை ஜீவாத்மா என்றும் நிஜம் என்பதை பரமாத்மா என்றும் எடுத்து கொண்டு நோக்கினால், நிஜம் புரியும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூர்ந்து கவனமாய் வாசித்து உங்களது பார்வையைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி ரவி.

      நீக்கு