வியாழன், 14 டிசம்பர், 2017

எண் எழுத்து இகழேல்

🌸 எண் எழுத்து இகழேல்.

(ஆத்திசூடி - உயிர் வருக்கம்)


எண் எழுத்து இகழேல் : 

பொருளும், அருளும் கற்பதை அலட்சியப்படுத்தாதே.

எண் என்பது கணித மொழி. கணிதம் கற்பது அறிவை வளர்க்கும்.
கணித அறிவு பொருள் ஈட்டல், பெருக்குதல், காத்தல் மற்றும் வரவு, செலவை நிதானித்தல் எனவும் புரிந்து கொள்ளலாம்.

எழுத்து என்பது  இலக்கியம். இலக்கியத்தைக் கற்பது பண்பாட்டை வளர்க்கும்.
ஒரு மனிதனை உயர்வடையச் செய்வது நல் சிந்தனைகளே.

குற்றமற்ற நீதியைப் போதிக்கும் இலக்கியங்களே மனித மனதை பண்படுத்துகின்றது. மனித மாண்பை செழுமையாக்குகின்றது. வாழ்வின் பொருளை கற்றுத் தருகின்றது.

ஆக இவை இரண்டும் ஓர் உயிருக்கு இரண்டு கண்கள் போன்றது.
ஆக இவ்விரு துறைகளையும் அலட்சியம் செய்யாமல் கற்க வேண்டும்
என்பதே இவ் வாக்கியத்தின் பொருள்.

பொருளும், அருளும் கற்பதை அலட்சியப்படுத்தாதே.

கல்வியே உலகில் குறைவற்ற மேலான செல்வம்.

தேடல் நிறைந்த கல்வி சிந்தனையைத் தெளிவிக்கும்.

ஞானம் தீமையை விட்டு விலகும் புத்தியை கற்றுத் தரும்.

மன கண்களை திறக்கும்.
மனம் போனபடி போகவிடாமல் மனதை நல்ல வழியில்
செலுத்த வல்லது அறிவு.

நுட்பமான அறிவுடையவர் நாவடக்கம் காப்பர்.

கற்றோர் தமக்கு வரக்கூடிய நன்மை, தீமைகளை முன்கூடியே யூகித்து அறிய முடியும்.

பகிர்ந்து அளிக்கும்போது அறிவு விசாலமடைகிறது.

ஆற்றுப்படுகையின் மணல் வெளியில் தோண்டத் தோண்ட, நீர் சுரக்கும் ;
அது போல படிக்க படிக்க சிந்தனை கூர்மையாகும்.

நல்லறிவு, நற்பண்புடையோர் செல்லுமிடமெங்கும் சிறப்படைவர்.

நீதியைக் கற்று, உணர்ந்து கடை பிடிப்பவர் நன்மையும், புகழையும் அடைவர்.

கற்றது கையளவு.

4 கருத்துகள்: