🌸 ஊக்கமது கைவிடேல்.
(ஆத்திசூடி - உயிர் வருக்கம்)
ஊக்கமது கைவிடேல் :
விடாமுயற்சி கை விடாதே.
அல்லது
தன்னம்பிக்கை இழக்காது விடாமுயற்சியுடன்
எடுத்த செயலை செய்து முடியுங்கள்.
உள்ள உறுதியே உண்மையான சக்தி.
உலகத்தில் மிகச் சிறந்த செல்வம் விடாமுயற்சி.
உறுதியான மனமே எத்தனைத் துன்பங்கள்
எதிர் கொண்டு வந்தாலும் விடாமுயற்சியுடன்
எடுத்த காரியத்தை செய்து முடிக்கும்
வல்லமை கொண்டது.
இடர்களைக் கண்டு கலங்காது
மன உறுதியுடன் எடுத்துக் கொண்ட
செயலைச் செய்து முடிப்பவரை
பொருளும், புகழும் தேடி விசாரித்துக்
கொண்டு வந்து சேரும்.
மனிதர்களின் முன்னேற்றம் என்பது வாழ்க்கையில்
உயர்ந்த இலட்சியத்தை இலக்காகத் தீர்மானிப்பது.
பின்பு அந்த இலக்கை அடையத் தன்னம்பிக்கையுடன்
விடாது முயற்சி செய்வதே ஆகும்.
உதாரணம்:
ஒரு பிரபல தொழில் அதிபரைப் பார்த்து ஓர் இளைஞர்,
உங்களது வெற்றியின் ரகசியம் என்ன என்று சொல்ல முடியுமா ?
என்று கேட்டார் .
தொழிலதிபர் சொன்னார்: இரகசியம் என்று எதுவுமில்லை.
வாய்ப்புக் கிடைக்குமா என்று எதிர்பார்த்து
கதவைத் தட்டிக் கொண்டேதான் இருக்க வேண்டும் .
இளைஞன் கேட்டான்: வாய்ப்புக் எப்போது கிடைக்கும்?
கதவு எப்போது திறக்கும் என்று எப்படிக் கண்டுபிடிப்பது ?
தொழில் அதிபர் சொன்னார்: “கண்டுபிடிக்க வழியில்லை;
திறக்கும் வரையில் தட்டிக் கொண்டு இருப்பதுதான் வழி.”
முயற்சி திருவினையாக்கும்.
நன்றி : உதாரணம் http://www.aramseyavirumbu.com இலிருந்து எடுக்கப்பட்டது.
உண்மை...ஊக்கம் தனை கைவிடோம்.....
பதிலளிநீக்குமிக்க நன்றி ரவி.
நீக்கு