(ஆத்திசூடி - உயிர்மெய் வருக்கம்)
இதன் பொருள் அழகு அற்ற செயல்களைச் செய்யாதே என்பதாகும்.
இங்கு அழகற்ற என்ற சொல் குறிப்பிடுவது பிறர் மனதுக்கு மகிழ்ச்சி தராத செயலாகும். பிறர்க்குத் துயரம் தரக்கூடிய செயல்களைச் செய்தல் கூடாது.
இன்று மதத்தின் மீதுள்ள தீவிருப்பற்று காரணமாக மிக மெத்தப் படித்தவர்கள் கூட மாற்றுச் சமயத்தவரைக் குறித்து இழிவாகப் பேசுகின்றனர்.
அது போல் சாதி என்கிற அடிப்படையில் பாகுபாடு காட்டி வீட்டுக்குள் அனுமதிக்க மறுப்பவர்கள் இன்றும் உண்டு. அவர்கள் மனம் புண்படும்படி துவேஷமாகப் பேசுகின்றனர்.
மொழி வெறி கொண்டு பிற மொழியைத் தரம் தாழ்த்தி விமர்சிப்பவர் உண்டு. அரசியல் தலைவர், நடிகர் போன்ற தனி மனித ஆளுமை மீதுள்ள வெறியின் வெளிப்பாடு நாம் அறிந்ததே.
பெண்கள், சிறு குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்முறையைப் பற்றிய செய்திகள் தினசரி வாசிக்கிறோம். அதைப் பார்க்கவும் செய்கிறோம்.
இத்தகைய பிறர் மனம் புண்படுத்தக் கூடிய எந்த ஒரு இழிவான செயல்களையும் செய்யாதே என ஆத்திச்சூடி அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறது.
நமது சொல்லால், செயலால் பிறர்க்குத் துயரம் தரும் சொற்களைப் பேச வேண்டாம். இனிமையான வார்த்தைகளைப் பேசுவோம்.
நமது செயல்கள் நம்மைச் சுற்றி வாழ்பவர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக அமையட்டும். அழகு என்பது புறத் தோற்றம் அல்ல. கனிவான பேச்சு. துயர் நீக்கும் செயல்.
அருமையான விளக்கம்.
பதிலளிநீக்கு.....
மூதறிஞர் வ சுப மாணிக்கனார்,
"அழகலாதன செயேல்"
என்பதற்கு
"சிறப்பில்லாத செயல்களைச் செய்யாதே"
என்றும் பொருள் சொல்கிறார்.
.....
தொடருங்கள்.
.....
ராஜன்.சே
இந்த விளக்கமும் பொருத்தமாக இருக்கிறது Sir. மிக்க நன்றி.
நீக்குநல்ல விளக்கம்.
பதிலளிநீக்குசுயநலம் இல்லாது பிறர் மனம் புண்படாது பேசுதல் என்பது ஆகச் சிறந்த குணம்
நல்ல பதிவு
கீதா
நன்றி மேடம்.
நீக்கு