Comfort Zone to Growth Zone.
வளர்ச்சி மகிழ்ச்சியை அளிக்கிறது.
கல்வி, பதவி, பொருளாதாரம், பொறுப்பு என்பதில் ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு உயர்வது வளர்ச்சி.
அனைவரும் உயர்ந்த நிலையை அடைய முயல்கிறோம் . ஆனாலும் சில மனத் தடைகள் வளர்ச்சியைத் தடுக்கிறது. அவை களையப்படுவது அவசியம்.
அது போல வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய நற்பண்புகளைக் கடைப்பிடித்தல் முக்கியம். திறன்களை மேம்படுத்துவதும் அவசியம்.
வாழ்வின் வளர்ச்சிப் பாதையில் இடைப்படும் நான்கு வித்தியாசமான மன நிலை களங்கள் (Zones) இங்கு மிகச் சுருக்கமாக.
1. தொந்தரவு அற்ற சுகவாழ்வு (Comfort Zone) :
"கப்பல் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருக்கும் போது மிகவும் பாதுகாப்பானது. ஆனால் அது அதற்காக உருவாக்கப்படவில்லை"
அது புயலின் சீற்றத்தை, கடலின் கொந்தளிப்பை, சூறைக் காற்றின் வேகத்தை எதிர்த்துப் பயணப்பட வேண்டும்.
வாழ்வின் முன்னேற்றத்திற்கு மிகப் பெரும் தடையாக இருப்பது பாதுகாப்பான வாழ்க்கைச் சூழலை விட்டு வெளியேற மறுப்பது.
சொந்த ஊர், குறைந்த ஊதியம் என்றாலும் எளிதான வேலை, நிரந்த வேலை ஆனால் முன்னேற்றத்திற்கு வாய்ப்பில்லை.., என நன்குத் தெரிந்திருந்தாலும்,
பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு புதிய வாய்ப்புகளை நோக்கி நகர மறுத்து, தகுதிக்கும் திறமைக்கும் குறைவான சூழலில் வாழ முற்படுவது வளர்ச்சியைத் தடுக்கும்.
பாதுகாப்பான, கட்டுக்கோப்பு நிறைந்த சூழலை விட்டு வெளியேறி சவால்களைச் சந்திப்பதே வளர்ச்சிக்கானத் தொடக்கம்.
சுகமான வாழ்வு தேக்க நிலை ; போராட்டம் நிறைந்த வாழ்வே உயர்வு.
2. அச்ச வளையம் (Fear Zone) :
காரணமற்ற மன பயம் வளர்ச்சிக்கு எதிரி.
அது தன்னம்பிக்கையைச் சீர் குலைக்கும்.
வீணான கற்பனைகளைத் தோற்றுவிக்கும்.
எந்தவொரு புது முயற்சியையும் செய்ய விடாது தடுக்கும்.
ஒரு புதிய முயற்சியைச் செய்ய முடியாததற்கு ஏதேனும் சாக்குப் போக்குகளைச் சொல்லும்.
விமரிசனங்களை எதிர்கொள்ளப் பயப்படும்.
ஏதேனும் குறைகளைச் சொன்னால் தொட்டாற்சிணுங்கியாக ஓடி ஒளிந்து கொள்ளத் தூண்டும்.
இது ஒரு எதிர்மறை மனநிலை.
3. கற்றுக் கொள்ளுதல் (Learning Zone) :
வாழ்க்கையில் முன்னேற அனுபவங்கள், புத்தகங்கள் உதவிடும்.
சவால்களை எதிர்கொள்வது, சிக்கல்களைப் புரிந்து கொண்டு அதைச் சரி செய்வது அனுபவ அறிவை மேம்படுத்தும்.
புதிய தொழில் நுட்பங்களைக் கற்பது, துறை சார்ந்த திறன் மேம்படுத்துவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
4. எழுச்சித் தளம். (Growth Zone) :
படைப்பின் நோக்கத்தை உணர்வதே வாழ்வில் மிக உயர்ந்த நிலை அடைய அடிப்படைத் தேவை.
நாம் இந்த உலகில் வாழ்வதன் பயன் எது என உணர்ந்தால், அந்த இலக்கை நோக்கி நமது கனவுகள் விரியும்.
நாம் இந்த உலகில் வாழ்வதன் பயன் எது என உணர்ந்தால், அந்த இலக்கை நோக்கி நமது கனவுகள் விரியும்.
அது வளர்ச்சியையும் புதிய இலக்குகளையும் நிர்ணயிக்கத் தூண்டும்.
இலக்குகளை அடைய உதவும் வழிகளை ஆராய்ந்து உழைத்தால் கனவுகளை மெய்ப்படும்.
இலக்கை நிர்ணயிப்பதும் அதை அடைவதுமே வெற்றி நிறைந்த வாழ்க்கை.
அருமை... வாசிப்பு முடிந்த மறுநிமிடம் நிசப்தமாய் நான் உணர்ந்தேன்.. நான் எந்த Zone ல இருக்கிறேன் என்று... நல்ல தீர்க்கமான பதிவு...
பதிலளிநீக்குஇன்னும் வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் செல்ல உங்களுக்கு நிறையத் தருணங்கள் இருக்கிறது பூங்குன்றன்.:).
நீக்குவருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.
நன்று நன்றி
பதிலளிநீக்குநன்றி ரவி.
நீக்குமனநிலைக் களங்களைப் பற்றி அருமையான விளக்கம்.
பதிலளிநீக்குபாதுகாப்பு மற்றும் அச்ச வளையங்களை விட்டு வெளியேறி வந்து கற்றலில் கருத்தைச் செலுத்தி வாழ்வில் உயர்வதற்கான உந்துதலைத் தரும் நல்ல பதிவு!
மொத்தக் கட்டுரையின் சாரத்தையும் ஒற்றை வரியில் மேற்கோள் போல எழுதி விட்டீர்கள். மிக்க நன்றி மேடம்.
நீக்கு