Desiderata
இந்த புகழ்பெற்ற உரையாடல் வடிவிலான வசனக் கவிதை மேக்ஸ் எர்ஹ்மன் (Max Ehrmann) என்பவரால் 1927 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது.
Desiderata என்னும் இலத்தீன் வார்த்தையின் பொருள் விரும்பிய விஷயங்கள். (Desierd things).
இவ்வசன கவிதை ஒரு வாழ்க்கை கையேடு போன்றது.
வாழ்க்கை என்பது போராட்டம் நிறைந்தது. எனினும் உங்கள் தனித்துவத்தை இழக்காது வாழ்க்கையை நேர்மையோடும், காருண்ணியத்தோடும் பயணியுங்கள். அதுவே உறுதியான வழி. இதுவே இவ் வசனக் கவிதையின் சாரம்.
உறவுகள், தொழில், மனநலம், முதுமை, கடவுள், இயற்கை, ஆன்மா, அமைதி என வாழ்வின் பல கூறுகள் இக் கவிதையினுள் அடங்கியுள்ளன.
இதற்காகவே ..,
அவசரம், அமளி, இரைச்சல் இவற்றிற்கு இடையில் இவ்வுலகில் எவ்விதம் அமைதியோடு வாழ்வது?
உங்கள் ஆன்மாவின் மெல்லிய சப்தத்தைக் கேட்பதில் மட்டும் மிகவும் கவனமாக விழிப்புணர்வுடன் இருங்கள். எப்போதும் உங்கள் நினைவில் இது இருக்கட்டும்.
உங்களால் கூடுமானவரை சக மனிதர்களுடன் சரணடையாது இயன்றவரை நல்லதொரு நட்புறவைப் பேணுங்கள்.
உண்மையை அமைதியாகவும் தெளிவாகவும் பேசுங்கள் ; மற்றவர்களின் பேச்சுக்கும் செவிமடுங்கள். நீங்கள் கேட்பதற்குத் தயாராக இருப்பின், மந்தமானவர்கள், அறியாமை நிறைந்தவர்களிடமும் கூடச் சொல்வதற்கு ஒரு கதை இருக்கிறது.
மூர்க்கமாக உரத்துப் பேசும் நபர்களைத் தவிர்க்கவும். அவர்கள் ஆவியை விசனப் படுத்துகிறார்கள்.
உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள். ஒப்பீடு வீணானது. கசப்பானது. ஏனென்றால் எப்போதும் உங்களைவிட உயர்ந்த மற்றும் குறைந்த நபர்கள் இந்த உலகில் உண்டு
உங்கள் சாதனைகளையும் திட்டங்களையும் அனுபவித்து மகிழுங்கள். உங்கள் வாழ்வு எவ்வளவு எளிமையாக இருப்பினும் அதையே ஆர்வமுடன் தொடருங்கள். ஏனெனில் மகிழ்ச்சி என்பது இறுதி இலக்கை அடைவது மட்டும் அல்ல.
அந்தப் பயணத்தின்போது எதிர் கொள்ளும் அனுபவங்களை இரசித்து மகிழ்வதிலும் அடங்கியிருக்கிறது. மாறிவரும் பருவத்தினூடே இதுவே உண்மையான அதிர்ஷடம் நிறைந்த சொத்து.
அந்தப் பயணத்தின்போது எதிர் கொள்ளும் அனுபவங்களை இரசித்து மகிழ்வதிலும் அடங்கியிருக்கிறது. மாறிவரும் பருவத்தினூடே இதுவே உண்மையான அதிர்ஷடம் நிறைந்த சொத்து.
உங்கள் வணிக விவகாரங்களில் எச்சரிக்கையாக இருங்கள். உலகம் தந்திரமானது. எனினும் பல நபர்கள் உயர்ந்த இலட்சியத்திற்காகப் பாடுபடுகிறார்கள். தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு உள்ளது. எல்லா இடத்திலும் வெற்றிகரமான வாழ்க்கை வீரத்தால் நிறைந்துள்ளது.
ஆனாலும் உங்கள் நல்லொழுக்கத்தை விடாது பின்பற்றவும். நீங்கள் நீங்களாக இருங்கள். உங்கள் தனித்துவத்தை ஒருபோதும் இழக்க வேண்டாம்.
அன்பே வாழ்க்கை. அன்பற்ற இழிநிலை வேண்டாம். ஏமாற்றம் மற்றும் வாடிய முகத்திற்கு அன்பு குளிர்ச்சியான பனிபடர்ந்த பசும் புல்லைப் போன்றது. அன்பைப் பகிருங்கள்.
இளமையின் வீரியத்தை நம்புவதைவிட முதியவர்களின் ஆலோசனைகளைச் சரணடைந்து மனதார ஏற்றுக் கொள்ளுங்கள். அனுபவம் சிறந்த ஆசான்.
திடீர் துரதிருஷ்டம் எதிர்பாராத தருணத்தில் உங்களைத் தாக்கக் கூடும். அதின் பிடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஆவியின் மன வலிமையை வளர்த்துக் கொள்ள விழிப்பாக இருங்கள்.
இருண்ட கற்பனைகள் உங்களைத் துன்பப் படுத்த அனுமதிக்க வேண்டாம். பல அச்சங்கள், மனச் சோர்வு தனிமையில்தான் பிறக்கின்றன.
இருண்ட கற்பனைகள் உங்களைத் துன்பப் படுத்த அனுமதிக்க வேண்டாம். பல அச்சங்கள், மனச் சோர்வு தனிமையில்தான் பிறக்கின்றன.
பரிபூரணமான நன்னடத்தை விதிகள் ஒருபுறம் இருக்கட்டும். முதலில் நீங்கள் உங்கள் ஆன்மாவை மென்மையாக நேசியுங்கள்.
நீங்கள் இப் பிரபஞ்சத்தின் குழந்தை. மரங்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் சற்றும் குறைவானவர்கள். அல்ல. நீங்கள் பாவி கிடையாது. குற்றவுணர்வு தேவையில்லை. இங்கே வாழ உங்களுக்கு எல்லாவித உரிமையும் உண்டு.
உங்களுக்குப் புரிந்தாலும் புரியாவிட்டாலும் இதுவே பிரபஞ்சத்தின் மாறாத உண்மை.
உங்களுக்குப் புரிந்தாலும் புரியாவிட்டாலும் இதுவே பிரபஞ்சத்தின் மாறாத உண்மை.
ஆகையால் நீங்கள் எதைக் கடவுளாகக் கருதுகிறீர்களோ அந்த உணர்வுத் தளத்தில் உள்ளம் அமைதியால் நிரம்பட்டும்.
உங்கள் உழைப்பு, விருப்பங்கள் எதுவாக இருப்பினும், முதலில் ஆன்மாவில் அமைதியைக் காத்துக் கொள்ளுங்கள். சந்தடி, சச்சரவு , குழப்பத்திற்கு முக்கியத்துவம் தேவையில்லை.
சில சமயங்களில் வாழ்க்கை மகிழ்ச்சியற்றது; உடைந்த கனவுகளுடன் சோர்வும் நிறைந்தது: வேதனையாகவும் இருக்கலாம்.
எனினும் இப்போதும் இது ஒரு அழகான உலகம் தான்.
எனினும் இப்போதும் இது ஒரு அழகான உலகம் தான்.
மகிழ்ச்சியாக இருங்கள்.
மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
மூலக்கவிதை
மூலக்கவிதை
Desiderata
Max Ehrmann
- Go placidly amid the noise and haste,
and remember what peace there may be in silence.
- As far as possible without surrender
be on good terms with all persons.
- Speak your truth quietly and clearly;
and listen to others,
even the dull and the ignorant;
they too have their story.
Avoid loud and aggressive persons,
they are vexations to the spirit.
If you compare yourself with others,
you may become vain and bitter;
for always there will be greater and lesser persons than yourself.
Enjoy your achievements as well as your plans.
Keep interested in your own career, however humble;
it is a real possession in the changing fortunes of time.
Exercise caution in your business affairs;
for the world is full of trickery.
But let this not blind you to what virtue there is;
many persons strive for high ideals;
and everywhere life is full of heroism.
Be yourself.
Especially, do not feign affection.
Neither be cynical about love;
for in the face of all aridity and disenchantment
it is as perennial as the grass.
Take kindly the counsel of the years,
gracefully surrendering the things of youth.
Nurture strength of spirit to shield you in sudden misfortune.
But do not distress yourself with dark imaginings.
Many fears are born of fatigue and loneliness.
Beyond a wholesome discipline,
be gentle with yourself.
You are a child of the universe,
no less than the trees and the stars;
you have a right to be here.
And whether or not it is clear to you,
no doubt the universe is unfolding as it should.
Therefore be at peace with God,
whatever you conceive Him to be,
and whatever your labors and aspirations,
in the noisy confusion of life keep peace with your soul.
With all its sham, drudgery, and broken dreams,
it is still a beautiful world.
Be cheerful.
Strive to be happy.
பதிலளிநீக்குவாழ்க்கை என்பது போராட்டம் நிறைந்தது. எனினும் உங்கள் தனித்துவத்தை இழக்காது வாழ்க்கையை நேர்மையோடும், காருண்ணியத்தோடும் பயணியுங்கள். அதுவே உறுதியான வழி
நீங்கள் உங்கள் ஆன்மாவை மென்மையாக நேசியுங்கள்.
🙏🙏🙏
மிக்க நன்றி குமாரவேலு.
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி ரவி.
நீக்குமிக அருமை.. ஆன்மாவின் மேன்மையை தேடுவோம்..!!
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்கு/மரங்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் சற்றும் குறைவானவர்கள் அல்ல. /
பதிலளிநீக்குஅருமையான கருத்துகள் அழகாகச் சொல்லப்பட்டுள்ளன. சிறப்பான தமிழாக்கம்.
மிக்க நன்றி மேடம்.
நீக்கு