பிறவிச் சுழற்சியிலிருந்து விடுதலை.
உயிர் தாவரப் பொருளாகப் பிறந்து பலவித அனுபவம் மூலமாக அறிவு வளர்ச்சியடைந்து தேவராக உயர்ந்த நிலையாகிறது .
எனினும் உயிர் ஒவ்வொரு பிறப்பிலும் அந்தப் பிறவியில் அனுபவிக்கும் இன்ப, துன்ப உணர்வுகளை உண்மை என நம்பிப் பிறவித் தளையில் சிக்கி உழல்கிறது.
இறைவனைக் கண்டு அவர் திருவடி சரணடைந்தால் மட்டுமே பிறவியின் அவஸ்தைகள் மாயம் எனப் புரிந்து பிறவிச் சூழலிலிருந்து விடுதலை அடைய இயலும்.
26. புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
27. பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
28. கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
29. வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
30. செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
31. எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
32. மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் .
பொருள் :
உயிர் பலவாகப் பிறக்கிது அது ;
26. புல், தாவரம், புழு, மரம்,
27. பலவித மிருகம், பறவை, பாம்பு,
28. கல், மனிதர், பேய், பூதம்,
29. அசுரர், முனிவர், தேவர்,
30. அசையாப் பொருள், அசையும் பொருள் என்னும் இருவகைப் பொருள்களுள்ளே
31. எல்லாப் பிறவிகளிலும் பிறந்து இளைத்தேன் எம் பெரிய இறைவனே
32. இப்பொழுதும் உண்மையாகவே உனது அழகியத் திருவடிகளைச் சரணடைந்ததால் இறையறசில் வாழும் பாக்கியம் அடை.தேன்.
சாரம் :
இடம் பெயராது ஒரே இடத்தில் வாழும் உயிரினம் (அசையாப் பொருள் - தாவரம்), இடம் பெயர்ந்து வாழும் உயிரினம் (அசையும் பொருள் - விலங்கினங்கள்) என எல்லா உயிரினங்களையும் இருவகையாகப் பிரிக்கலாம்.
தாவர வகை நான்கு : கல், புல், பூடு, மரம்.
சங்கம வகை பத்து : புழு, பாம்பு, பறவை, பல மிருகங்கள், மனிதர், பேய், பூதம், அசுரர், முனிவர், தேவர் என இத்தனை பிறவிகளாகவும் பிறந்து உயிர்கள் அதிலேயே சிறைப்பட்டு உழல்கின்றன. இறைவா! உமது திருவடியைக் கண்டு அதைப் பற்றிச் சரணடைந்தால் மட்டுமே இப்பிறவித் துயரத்திலிருந்து விடுதலைப் பெற்று பிறவா பெருநிலை அடைய முடியும்.
இறைவா! உமது திருவடியைக் கண்டு அதைப் பற்றிச் சரணடைந்தால் மட்டுமே இப்பிறவித் துயரத்திலிருந்து விடுதலைப் பெற்று பிறவா பெருநிலை அடைய முடியும்.
பதிலளிநீக்குஇறைவனின் திருவடியைப் பற்றுவது ஒன்றே பிறவிப் பினியிலிருந்து நம்மை விடுவிக்கும்
நன்றி குமாரவேல்.
நீக்கு