திங்கள், 5 ஆகஸ்ட், 2019

அவனரு ளாலே அவன்தாள் வணங்கி

வருபொருள்.


"அவனருளாலே அவன்தாள் வணங்கி" எனும் திருவாசகத்தின் சிறப்பு மிக்க வரிகள் இப் பாடலில் அமைந்துள்ளது. 
இறைவன் அருள் இருப்பதால் மாத்திரமே அவர் திருவடியை வணங்குகிறேன்.

எனது சுய முயற்சியோ அல்லது தவ வலிமையினாலோ அல்ல என்பது இதன் பொருள்.

17. சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனால்
18. அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச்
19. சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
20. முந்தை வினைமுழுதும் ஓய வுரைப்பனியான்
21. கண்ணுதலான் றன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
22. எண்ணுதற் கெட்டா எழிலார் கழிலிறைஞ்சி

பொருள் :


17. சிவபெருமானாகிய இறைவன் என் சிந்தையில் அசையாது உறுதியாகத் தரித்து நிற்பதனால்,

18. அந்த இறைவனது இரக்கமும், தயையும் என்மீது அருளப்பட்டதாலேயே அவனது திருவடியை வணங்கும் உணர்வு எனக்கு ஏற்பட்டது.

19. ஆகையால்  மனம் மகிழச் சிவபுராணம் ஓதுகிறேன்.

20. அதைப் பாடும்போது  எனது பழைய தீய செயல்களின் விளைவுகள் அனைத்தையும் இறைவன் நீக்கிப் போடுகிறார்.

21. இறைவா! உமது அருட்கண் காட்ட, அதனால் உம் திரு முன்பு வந்து நிற்கிறேன். 

22. நினைத்துக் கூட பார்க்க முடியாத அழகு வாய்ந்த அந்தத் திருவடியை வணங்கி இறைஞ்சி நிற்கிறேன்.

சாரம் :

இறைவன் என் மனதில் தங்கி இருக்கிறார். 

அந்த அருளாலே அவரை சரணாகதி அடைந்து வணங்குகிறேன்

அவர் சிறப்பு உணர்ந்ததால் மனம் மகிழ்ந்து  சிவபுராணத்தைப் பாடுகிறேன். 

அது எனது முந்தைய வினைகள் எல்லாம் அழித்து ஒழித்து  ஓயப் பண்ணுகிறது.

கற்பனைக்கு எட்டாத அழகு வாய்ந்தவரது திருப்பாதத்தைப் பணிந்து வணங்குகிறேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக